தாயை இழந்த குட்டிகளுக்கு பெற்றோர்களான பொம்மன், பெல்லி.. ஆஸ்கரை தட்டி தூக்கிய தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் கதை இதுதான்

தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே பேசப்பட்டு வரும் ஒரே விஷயம் ஆஸ்கர் விருதை வென்ற குறும்படத்தை பற்றி தான். இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கிடைத்துள்ள இந்த விருதுக்கு முக்கிய காரணம் ரகு, பொம்மி என்ற இரு யானை குட்டிகள் தான். அந்த யானைகளுக்கும் முதுமலை காட்டில் இருக்கும் வயசான தம்பதிகளுக்கும் இடையே இருக்கும் பந்தத்தை பற்றி தான் இந்த குறும்படம் உணர்த்துகிறது.

சில வருடங்களுக்கு முன்பு தாயை இழந்த குட்டி யானை ஒன்று உடம்பில் பலத்த காயங்களுடன் காட்டில் கண்டெடுக்கப்படுகிறது. பலரும் அதை காப்பாற்ற முடியாது என கூறிய போது பொம்மன் என்ற பாகன் மட்டும் என்னால் முடியும் என்று அந்த யானை குட்டியை பராமரித்தார். அவருக்கு துணையாக பெல்லி என்ற பெண்மணியும் வருகிறார். அதன் பிறகு சில மாதங்களிலேயே ரகு இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது.

Also read: 7 ஆஸ்கர் விருதுகளை தட்டிய ஒரே படம்.. இப்போது அதிக அளவில் தேடப்பட்டு வரும் படம்

இப்படி செல்லும் அவர்களின் வாழ்க்கையில் தாயை இழந்த ஐந்து மாத குட்டியான பொம்மியும் வருகிறது. இந்த இரு குட்டிகளையும் பராமரித்து வந்த பொம்மன், பெல்லி இருவரும் ஒரு கட்டத்திற்கு பிறகு திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த வயதான தம்பதிகளின் பாச மழையில் இரு குட்டிகளும் சந்தோஷமாக இருக்கின்றது.

இதைத்தான் புகைப்படக் கலைஞரான கார்திகி கன்சல்வாஸ் ஒரு டாக்குமென்டரி படமாக இயக்கியிருந்தார். கடந்த வருடம் டிசம்பர் மாதம் வெளியான இந்த திரைப்படம் தான் இப்போது ஆஸ்கர் விருதை பெற்றுள்ளது. இதனாலேயே தற்போது உலகம் முழுவதும் பொம்மன், பெல்லியின் வாழ்க்கையும், ரகு, பொம்மி என்ற யானை குட்டிகளும் வெகு பிரபலமாகியுள்ளது.

Also read: 2023 ஆஸ்கர் விருதை தட்டி தூக்கிய ஆர்ஆர்ஆர்.. நினைத்ததை முடித்துக் காட்டிய ராஜமவுலி

மேலும் அந்த குறும்படத்தில் முதுமலை காட்டின் அழகும், யானை குட்டிகளின் துரு துரு சேட்டைகளும் பார்ப்பவர்களை குழந்தைகளாக குதூகலிக்க வைக்கிறது. அது மட்டுமல்லாமல் தாயை இழந்த குட்டிகளுக்கு பெற்றோர்களாகவே மாறிப்போன வயதான தம்பதிகளும் நம்மை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்கள். இப்படி இந்த விருதுக்கான மூல காரணமாக இருக்கும் அந்த யானை குட்டிகள் இப்போது பொம்மன், பெல்லி ஆகியோரின் பராமரிப்பில் இல்லை.

அந்த யானை குட்டிகள் தற்போது வேறு ஒரு பாகனிடம் வளர்ந்து கொண்டிருக்கிறது. அந்த குட்டிகளை சொந்த பிள்ளைகளாகவே பாவித்து வளர்த்த அந்த மூத்த தம்பதிகள் இதனால் மனவருத்தத்தில் இருந்தாலும் இப்படி ஒரு விருது அந்த படத்திற்கு கிடைத்தது குறித்து தங்கள் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் இப்படி கூட ஒரு பந்தம் உருவாகுமா என்ற ஆச்சரியத்தையும் இந்த ஆவணப்படம் நமக்கு உணர்த்தி இருக்கிறது. தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த குறும்படத்திற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Also read: 36 வயதில் ஆஸ்கரை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய இயக்குனர்.. யானையை வைத்து இப்படியும் கதை சொல்ல முடியுமா?

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்