விக்ரம் வேதா பட ரீமேக்கில் அமீர்கான் விலகிய காரணம் இதுதானா? சுயநலம் பிடித்தவராக இருப்பார் போலயே!

விக்ரம் வேதா படத்தின் ஹிந்தி ரீமேக்கில் முதலில் நடிப்பதாக ஒப்புக்கொண்ட அமீர்கான் சுயநலமாக சில வேலைகளை செய்ய முயன்றதாகவும் அது நடக்காததால் அந்த படத்தில் இருந்து விலகியதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தமிழ் சினிமாவில் ஒரு சரித்திர சாதனை படைத்த திரைப்படங்களில் ஒன்றாக மாறியது விக்ரம் வேதா. அன்று வரை வந்து கொண்டிருந்த படங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட கதைக்களத்துடன் வெளியானது.

மேலும் இந்த படத்தில் நடித்த விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ஆகிய இருவருக்கும் அவர்களது திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தது. அதன் பிறகு மாதவன் ரீஎண்ட்ரி கொடுத்து தற்போது கலக்கிக் கொண்டிருக்கிறார்.

விஜய் சேதுபதி பற்றி சொல்ல வேண்டியதில்லை. புஷ்கர் காயத்ரி இயக்கியிருந்த இந்தப் படத்தில் சாம் சி எஸ் இசை பெரிய அளவில் பேசப்பட்டது. தமிழில் மிகப் பெரிய வெற்றி பெற்ற இந்த படம் மற்ற மொழிகளிலும் ரீமேக் ஆக இருந்தது.

அந்த வகையில் முதலில் விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் ஷாருக்கான் மற்றும் அமீர் கான் இருவரும் நடிக்கவிருந்தனர். பின்னர் இருவருமே விலகிவிட்டனர். ஆனால் அதில் அமீர்கான் விலகியதற்கு மட்டும் ஒரு குறிப்பிட்ட காரணத்தைச் சொல்கிறார்கள்.

அமீர்கானின் தங்கல் படம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சைனாவிலும் வசூலில் சக்கை போடு போட்டது. அதன் காரணமாக விக்ரம் வேதா படத்தின் கதைக்குள் சைனா சம்பந்தப்பட்ட விஷயங்களை அதிகம் புகுத்த வேண்டும் எனவும், கதைக் களத்தை இந்தியா மற்றும் சீனாவில் நடப்பது போன்று மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தாராம்.

ஆனால் அப்படி செய்தால் படத்தின் தன்மை கெட்டுவிடும் என்ற கருதி மறுத்து விட்டனர். தனக்கு பெரிய அளவில் வியாபாரம் ஆகாத இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறி விட்டு விலகி விட்டாராம் அமீர்கான்.

aamirkhan-cinemapettai
aamirkhan-cinemapettai

Next Story

- Advertisement -