வனிதாவின் திடீர் மதமாற்றத்திற்கு என்ன காரணம் தெரியுமா.? இது என்னடா புது உருட்டா இருக்கு

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தற்போது சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். இவர் இருக்கும் இடத்தில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அதனாலேயே ரசிகர்கள் இவரை வத்திகுச்சி வனிதா என்று செல்லமாக அழைத்து வருகின்றனர்.

சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சிலகாலம் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு விவாகரத்து, குடும்ப சண்டை என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் இருந்தது. அவை அனைத்தும் இவருடைய அடாவடித்தனத்தால் மீடியாவில் பரவி அனைவரின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானது.

ஆனாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாத வனிதா தற்போது தன் குடும்பத்தை விட்டு ஒதுங்கி தன் மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். அந்த சமயத்தில் தான் இவருக்கு விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

ஏற்கனவே ஓவராக பேசும் வனிதா அந்த நிகழ்ச்சியில் தன்னால் முடிந்த அளவுக்கு பிரச்சனையை கிளப்பி விட்டார். அது ரசிகர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளானது. அதைத் தொடர்ந்து அவர் தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என்று பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

கிறிஸ்துவ முறைப்படி நடந்த அவருடைய திருமணம் சில மாதங்கள் கூட நீடிக்கவில்லை. தன் கணவருக்கு குடி பழக்கம் இருக்கிறது என்று கூறி அழுது புலம்பிய வனிதா தற்போது அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் மீண்டும் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதனால் நிறைய சம்பவம் நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த படியே வனிதாவும் அங்கு பல பிரச்சனைகளை செய்து போட்டியாளர்கள் உட்பட அனைவரையும் எரிச்சல்படுத்தினார். பின்பு என்ன நினைத்தாரோ அந்த நிகழ்ச்சியில் இருக்கும் அனைவரையும் குறைகூறி தானாகவே வெளியேறினார்.

தற்போது சொந்தமாக யூடியூப் சேனல் வைத்திருக்கும் அவருக்கு கைவசம் சில திரைப்படங்களும் இருக்கிறது. இந்நிலையில் வனிதா மகிழ்ச்சிக்காகவும், மன அமைதிக்காகவும் புத்த மதத்தை பின்பற்றுவதாக சோஷியல் மீடியாவில் அறிவித்துள்ளார்.

இந்த செய்தியை பார்த்த நெட்டிசன்கள் அவரை நீங்க அமைதியா இருக்க போறீங்களா நம்பவே முடியலையே என்றும், அடுத்த திருமணத்திற்கு ரெடியாயிட்டீங்களா என்றும் கிண்டல் செய்து வருகின்றனர்.