திருட்டுத்தனமாக விற்கப்பட்ட டிக்கெட்டுகளால் குவிந்த பணம்.. வெட்ட வெளிச்சமான உண்மை

AR Rahman: ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி சமீபத்தில் மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி இருந்தது. மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் நடத்தப்பட்ட இசை கச்சேரி ஏஆர் ரகுமானின் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் ஒழுங்கான கட்டமைப்பு மற்றும் நிர்வாகயின்மை தான்.

அதாவது அங்கு போக்குவரத்து மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக பல அசம்பாவிதங்கள் நடந்துள்ளது. இதனால் கொந்தளித்த மக்கள் பல்லாயிரக்கணக்கான பணம் கொடுத்தும் இந்த நிகழ்ச்சியை காண முடியவில்லை என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். அதோடு மட்டுமின்றி தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை வைத்திருந்தனர்.

Also Read : சைக்கோ இயக்குனருடன் இணைந்த ஏஆர் ரகுமான்.. தாக்குப் பிடிப்பாரா, தலைத் தெறிக்க ஓட போகிறாரா?

அதன் பிறகு ஏஆர் ரகுமான் டிக்கெட் வாங்கியும் இந்நிகழ்ச்சியை பார்க்காத ரசிகர்களுக்கு பணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் ஒரு ட்வீட் போட்டு இருக்கிறார்.4,000 பேரில் 400 பேருக்கு இதுவரை ரீஃபண்ட் செய்துள்ளோம்னு இன்னைக்கி காலைல கிண்டுன அல்வா எல்லாம் பொய்யா கோப்பால்?

21,000 டிக்கட் எக்ஸ்ட்ரா வித்தீங்கன்னு செய்தி வருதே.. இது உண்மையா கோப்பால்? என கிண்டலடிட்டு ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதாவது ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய வேண்டும் என்றால் போலீசாரிடம் சரியான முறையில் அனுமதி வாங்க வேண்டும். அந்த வகையில் ஏஆர் ரகுமான் நடத்திய இசை நிகழ்ச்சிக்கு போலீசாரிடம் போலி கடிதம் அளித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Also Read : சின்ன புள்ள பேச்ச கேட்டு மூக்கை உடைத்துக் கொண்ட ஏஆர் ரகுமான்.. வாரிசால் அசிங்கப்பட்டு புகழை கெடுத்த இசைபுயல்.!

அதாவது நேரு உள் விளையாட்டு அரங்கில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி நடத்த 20 ஆயிரம் பேர் கூடுவதற்கு மட்டுமே அனுமதி கேட்கப்பட்டிருக்கிறது. ஆனால் பணத்திற்கு ஆசைப்பட்டு திருட்டுத்தனமாக அதிகமாக 21 ஆயிரம் டிக்கெட்கள் விற்கப்பட்டிருக்கிறதாம். அதன்படி மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சிக்கு மொத்தமாக 41 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான மக்கள் ஒரே இடத்தில் கூடியதால் கூட்ட நெரிசலில் அங்கு அசம்பாவிதம் நடந்துள்ளது அம்பலமாகி இருக்கிறது. மேலும் இதற்காகவும் இப்போது இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டிருக்கிறது.

blue-sattai-maran
blue-sattai-maran

Also Read : ஏஆர் ரகுமான் போல் என்னால் அசிங்கப்பட முடியாது.. லோகேஷுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்

- Advertisement -