சின்ன புள்ள பேச்ச கேட்டு மூக்கை உடைத்துக் கொண்ட ஏஆர் ரகுமான்.. வாரிசால் அசிங்கப்பட்டு புகழை கெடுத்த இசைபுயல்.!

AR Rahman: ஏஆர் ரகுமான் இத்தனை வருடங்களாக சினிமாவில் சம்பாதித்த பெயரை ஒரே இரவில் கெடுத்துக் கொண்டார். அதாவது சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்சி ஏஆர் ரகுமானின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்தனர்.

அங்கு வரும் ரசிகர்களுக்கு சரியான இருக்கை, வசதி பாதுகாப்பு ஆகியவற்றை செய்ய இந்த ஏற்பாடை தயார் செய்த நிறுவனம் தவறிவிட்டது. இதனால் ரசிகர்கள் ஆத்திரம் அடைந்து தங்களது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இந்த நிகழ்வுக்கு ஏஆர் ரகுமான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

Also Read : ஏஆர் ரகுமான் போல் என்னால் அசிங்கப்பட முடியாது.. லோகேஷுக்கு அதிரடி உத்தரவு போட்ட விஜய்

இது குறித்து கடைசி வரை பேசாமல் இருந்த ஏ ஆர் ரகுமான் திடீரென இந்த நிகழ்வுக்கு நானே பலிகாடாக ஆகிறேன் என கோபத்தில் கொந்தளித்தார். சென்னையில் இதனால் நிறைய மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என்று வேதனையின் வெளிப்பாடாக பேசினார். இந்நிலையில் இந்த நிகழ்வுக்கு காரணம் ஏஆர் ரகுமானின் வாரிசு தான்.

சென்னையில் மிகப்பெரிய அளவில் ஏஆர் ரகுமானின் கச்சேரி நடத்த முடிவு செய்தபோது எந்த நிறுவனத்திடம் இந்நிகழ்ச்சியை ஒப்படைக்கலாம் என யோசித்து உள்ளனர். அப்போது தான் ஏஆர் ரகுமானின் மகன் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியை நடத்திய நிறுவனத்தை சிபாரிசு செய்து இருக்கிறார்.

Also Read : நானே பலியாடாக ஆகிறேன், மலை போல் கொட்டிய காசு.. ஆவேசத்தில் ஏஆர் ரகுமான் எடுத்த முடிவு

மகன் சொன்னதற்காக விசாரிக்காமல் அந்த நிறுவனத்திற்கே மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியை ஏஆர் ரகுமான் கொடுத்தார். அங்கு கிட்டத்தட்ட 25 ஆயிரம் மக்கள் மட்டுமே கூட முடியும் நிலையில் பணத்தாசையால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை விற்று இருக்கிறார்களாம்.

இதனால் அங்கு எக்கச்சக்க குளறுபடிகள் ஏற்பட்டு ஏஆர் ரகுமானின் பெயருக்கு கலங்கம் வந்தது. அதன் பிறகு என்ன தான் ஏஆர் ரகுமான் தன் தரப்பு நியாயத்தை சொன்னாலும் அவரது வாழ்நாளில் இந்த அசிங்கத்தை மறக்க முடியாத படி இந்த நிகழ்வு இருக்கிறது. இவ்வாறு சின்ன பிள்ளையின் பேச்சைக் கேட்டு மூக்குடைந்து போய்விட்டார்.

Also Read : சாவு பயத்தை காட்டிய ஏ ஆர் ரகுமான்.. அனிருத்துக்கு இருக்கும் அறிவு கூட உங்களுக்கு இல்லையா.?

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -