மகனை கண்டுபிடித்து கொடுக்க ஒரு கோடி.. சைதை துரைசாமி அறிவித்ததன் பின்னணி இதுதான்

Saidai Duraisamy: கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் ஆற்றில் தவறி விழுந்த வெற்றி துரைசாமியை கண்டுபிடிக்க நடந்த போராட்டத்தில் நேற்று அவர் சடலமாக மீட்கப்பட்டார். இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அனைவரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மகனை கண்டுபிடித்து கொடுத்தால் ஒரு கோடி என சைதை துரைசாமி அறிவித்தது ஏன் என பத்திரிகையாளர் பாண்டியன் ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். சட்லஜ் ஆற்றில் தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இந்த ஆறு பாகிஸ்தானில் முடிவடைகிறது.

ஒருவேளை உடல் அங்கு சென்று விட்டால் பல சிரமங்கள் ஏற்படும். அதன் காரணமாகவே ஒரு கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் மகனை உயிரோடு பார்த்து விட மாட்டோமா என்று தவித்த ஒரு தந்தையின் பரிதவிப்பு தான் அது. ஆனால் வெற்றி துரைசாமியை சடலமாக மீட்டது தான் துரதர்ஷ்டம்.

Also read: வெற்றி துரைசாமி மாதிரியே அதன் மீது அஜித்துக்கு இருந்த தீரா காதல்.. நண்பனுடன் வைரலாகும் புகைப்படங்கள்

மேலும் ஒரு கோடி என அறிவிப்பு வந்ததும் அங்கு இருந்த பழங்குடியின மக்கள் கூட தேடுதல் வேட்டையில் தீவிரமாகி இருக்கின்றனர். ஏனென்றால் அவர்களை பொறுத்தவரையில் இது மிகப்பெரிய பணம் தான். இது ஒரு பக்கம் இருக்க மீட்பு குழுவினரும் வெற்றி துரைசாமியின் எடை கொண்ட பொம்மைகளை ஆற்றில் வீசி தேடுதல் வேட்டையை நடத்தி இருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து விபத்து நடந்த பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உடல் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் பேரிடர் குழு உட்பட ராணுவத்தினர் என அனைவரும் 24 மணி நேரமும் கண்காணித்து செயல்பட்டதால் தான் வெற்றி துரைசாமியின் உடலை கண்டறிய முடிந்தது என இந்த தேடுதல் பின்னணியை பற்றி பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Also read: பணத்துக்காக காவு வாங்கும் கொள்ளை கும்பல்.. வெற்றி துரைசாமி இறந்த சமயத்தில் பாக்யராஜ் வெளியிட்ட பகீர் வீடியோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்