வெற்றி துரைசாமி மாதிரியே அதன் மீது அஜித்துக்கு இருந்த தீரா காதல்.. நண்பனுடன் வைரலாகும் புகைப்படங்கள்

Ajith With Vetri Duraisamy Viral Photos: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தன் நண்பருடன் இமாச்சலப் பிரதேசம் சென்றபோது நடந்த விபத்தில் இவர் சட்லஜ் ஆற்றில் தவறி விழுந்தார்.

அதைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் இன்று அவருடைய உடல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு பலரும் தங்கள் இரங்கல்களை தெரிவித்து வரும் வேளையில் வெற்றி துரைசாமி நடிகர் அஜித்துக்கு நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தை போலவே இயற்கை ஆர்வலராக இருக்கும் இவர் அதன் மீது தீராக்காதல் கொண்டவர். தந்தை அரசியலில் இருந்த போதும் கூட இவர் எதார்த்தமான ஒரு மனிதராக மனிதநேயம் மிக்கவராக இருந்தார். அது மட்டுமல்லாமல் ஒரு சாகச விரும்பியும் கூட.

Also read: ஒரே படத்தில் 43 விருதுகள் வென்ற வாரிசு! சாகச பயணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அஜித்தின் உயிர் நண்பர்

அதனாலேயே அஜித்துடன் இவருக்கு ஒரு நல்ல நட்பு இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு கூட இவர் அஜித்துடன் இருக்கும் போட்டோவை தன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார். அதில் வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களுக்காகவும் சிறந்த சாகசங்களுக்காகவும் என குறிப்பிட்டிருந்தார்.

நண்பனுடன் அஜித்

ajith-vetri duraisamy
ajith-vetri duraisamy

அதைத்தான் தற்போது அஜித்தின் ரசிகர்கள் வருத்தத்துடன் ஷேர் செய்து வருகின்றனர். மேலும் வெற்றி துரைசாமியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு பலரும் தங்கள் ஆறுதல்களை கூறி வருகின்றனர். அஜித்தின் மனைவி ஷாலினியும் தன் வருத்தத்தை ஒரு போட்டோ மூலம் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

வெற்றி துரைசாமி-அஜித்

vetri-duraisamy-ajith
vetri-duraisamy-ajith

Also read: 9 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி.. எப்படி கண்டுபிடித்தனர் ஸ்பா வீரர்கள்