விஜய் ஆண்டனிக்கு நெருக்கடி கொடுத்தா இறுகப்பற்று.? ரத்தம் தெறித்த முதல் நாள் வசூல் விவரம்

Raththam,Irugapatru First Day Collection: எப்போதுமே சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் வெள்ளிக்கிழமையை குறிவைத்து நிறைய படங்கள் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அந்த வகையில் நேற்று விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ரத்தம் மற்றும் விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது.

நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் விஜய் ஆண்டனி சமூக அக்கறையோடு தேர்ந்தெடுத்து நடித்திருக்கும் படம் தான் ரத்தம். அமுதன் இயக்கத்தில் மகிமா நம்பியார், ரம்யா நம்பீசன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்தம் படம் நல்ல கருத்துள்ள படமாக இருந்தாலும் இயக்குனர் சில இடங்களில் சொதப்பிவிட்டார்.

Also Read : இந்த வாரம் ரிலீசாக போகும் 6 படங்கள்.. விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் திரிஷா

இதனால் கதையோடு ரசிகர்கள் ஒன்ற முடியாததால் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் 20 கோடி பட்ஜெட்டில் உருவான ரத்தம் படம் முதல் நாளில் 1.5 கோடி மட்டுமே வசூல் செய்திருக்கிறது. மேலும் விஜய் ஆண்டனி ரத்தம் படத்திற்கு போட்டியாக வெளியான விக்ரம் பிரபுவின் இறுகப்பற்று ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

அதாவது அன்றாட வாழ்வில் காதலர்கள் மற்றும் தம்பதியினர் இடையே நடக்கும் பிரச்சனையை எதார்த்தமாக கூறியிருக்கிறார் இயக்குனர். யுவராஜ் தயாளன் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் மூன்று விதமான தம்பதியினர் இடையே நடக்கும் பிரச்சனையே அழகாக எடுத்துரைத்திருக்கிறார்.

Also Read : Raththam Movie Review- மகளின் இறப்பிற்கு பின் வெளிவந்த விஜய் ஆண்டனியின் ரத்தம்.. க்ரைம் திரில்லர் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

மேலும் கனகச்சிதமான நடிகர்களின் தேர்வு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. ஆனாலும் இறுகப்பற்று படம் முதல் நாளில் 0.5 கோடி வசூல் மட்டுமே செய்து இருக்கிறது. ஆனால் இப்போது படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து வருவதால் அடுத்தடுத்த நாட்களில் கண்டிப்பாக இறுகப்பற்று படத்தின் வசூல் அதிகரிக்கும்.

இதனால் விஜய் ஆண்டனியின் ரத்தம் படத்தின் வசூல் பாதிக்கும் என்று தெரிகிறது. அதோடு மட்டுமல்லாமல் கடந்த வாரம் வெளியான சந்திரமுகி 2, இறைவன் போன்ற படங்களும் இப்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆகையால் போட்ட பட்ஜெட்டை விஜய் ஆண்டனி எடுப்பாரா என்ற நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

Also Read : Irugapatru Movie Review- கல்யாணம்னா ஆயிரம் பிரச்சனை வரும், மனதை இறுக்கிப் பிடித்த இறுகப்பற்று.. முழு விமர்சனம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்