இந்த வாரம் ரிலீசாக போகும் 6 படங்கள்.. விஜய் ஆண்டனி உடன் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் திரிஷா

This Week Release Tamil Movies: ஒவ்வொரு வாரமும் சினிமா பிரியர்களை குதூகலப்படுத்த வேண்டும் என்றே மூன்று அல்லது நான்கு படங்கள் ரிலீஸ் செய்யப்படுகிறது. அதுவும் இந்த மாதம் தொடர்ந்து பண்டிகை வருவதால் நண்பர்களாகவும் குடும்பமாகவும் திரையரங்குகளில் படங்களை பார்க்க குவிவார்கள்.

இதையெல்லாம் டார்கெட் செய்துதான் இந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் ஒரே நாளில் ஆறு திரைப்படங்களை ரிலீஸ் செய்கின்றனர். இந்த ஆறு படங்களுமே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிலும் விஜய் ஆண்டனி உடன் திரிஷா நேருக்கு நேர் மோத போகிறார்.

Also Read: விஜய் ஆண்டனியின் மகள் மீராவை பற்றி பயில்வான் வெளியிட்ட தகவல்.. ஆண்டவனுக்கே வெளிச்சம்!

சமீபத்தில் விஜய் ஆண்டனியின் மூத்த மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், அந்த துயரிலிருந்து மீள முடியாமல் தவிக்கிறார். இருப்பினும் அந்த பெரும் சோகத்தின் மத்தியிலும் அவர் நடித்த ‘ரத்தம்’ என்ற படம் ரிலீஸ் ஆக உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் படுஜோராக நடைபெறுகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 6ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.

அதே நாளில் பாரதிராஜா நடிப்பில் அவரது மகன் மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் சுசீந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மார்கழி திங்கள்’ படமும் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்டானது மட்டுமல்லாமல் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளதால் நிச்சயம் படம் வெற்றி பெறும் என்றும் பட குழுவினர் உறுதியுடன் உள்ளனர்.

Also Read: ஈஸியா ஏமாற்றப்படும் வெகுளித்தனமான 4 நடிகர்கள்.. உண்மையில் குழந்தை மனசு படைத்த மன்சூர்

அதேபோல் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை ஆர்வத்துடன் காத்திருக்கும் படம் தான் இறுகப்பற்று. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமான இயக்குனர் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, ஸ்ரீ, விதார்த் ஷரத்தா, ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படமும் வரும் வெள்ளிக்கிழமை அன்று தான் ரிலீஸ் ஆகிறது.

மேலும் இந்த வாரம் ரிலீஸ் ஆகும் இன்னொரு திரைப்படம் திரிஷா நடித்த ‘தி ரோடு’. அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்தப் படத்தில் திரிஷா செம போல்ட் ஆக நடித்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அவருக்கு இன்னொரு வெற்றியை கொடுக்கும் என்றும் நம்புகிறார்.

Also Read: நானும் தற்கொலைக்கு முயற்சித்தேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய கமல்

இதே போல் வரும் வெள்ளிக்கிழமை குழந்தைகள் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள படமான ‘ஹாட் பூட் த்ரி’ படமும் ரிலீஸ் ஆகிறது. இந்தப் படங்களுடன் இலங்கை முன்னாள் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட ‘800’ என்ற படமும் அக்டோபர் 6ம் தேதி தான் ரிலீஸ் ஆக உள்ளது.

இவ்வாறு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த ஆறு படங்களும் வரும் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் வெளியாகி திரையரங்கை பரபரப்பாக்கி உள்ளனர். அதிலும் விஜய் ஆண்டனியின் ரத்தம் மற்றும் த்ரிஷாவின் தி ரோட் போன்ற இரண்டு படங்களுக்கும் கடும் போட்டி நிலவப்போகிறது. அது மட்டுமல்ல இந்த 6 படங்களில் நம்பர் ஒன் இடத்தை எந்த படம் பிடித்து, வசூலில் மாஸ் காட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.