தென்னிந்திய படங்களை பற்றி கேவலமாக பேசிய ராசி கண்ணா.. அந்த பயம் இருக்கணும்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் படு பிசியான நடிகை என்றால் அது ராசி கண்ணா. இவர் தமிழில் இமைக்காநொடிகள், அடங்கமறு, துக்ளக் தர்பார், அரண்மனை 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திருசிற்றம்பலம் படத்திலும் ராசி கண்ணா நடித்துள்ளார்.

தற்போது இவருக்கு தமிழ், தெலுங்கு படங்களை காட்டிலும் இந்தி பட வாய்ப்புகள் அதிகம் வருகிறது. இதனால் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ராசி கண்ணா தென்னிந்திய படங்களின் பற்றி தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.அதில் தென்னிந்திய படங்களில் பெண்களை மோசமாக காட்டுகிறார்கள்.

மில்க் பியூட்டி, லாஸ் என ஹீரோயின்களை அழைப்பார்கள். அப்படியென்றால் ஒன்று கிளாமராக இருக்க வேண்டும், இல்லையென்றால் நன்றாக நடிக்க வேண்டும். இது ரெண்டுமே ஒருவரிடம் இருக்க முடியாது என நினைப்பவர்கள். மேலும் நான் அழகாக இருப்பதாக கூறி பல பட வாய்ப்புகளை நிராகரித்து உள்ளனர் எனவும் கூறினார்.

இந்த செய்தி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தென்னிந்திய சினிமாவில் உள்ள பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வந்தனர். இதைப்பார்த்த ராசி கண்ணா தென்னிந்திய பட வாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற பயத்தில் தற்போது ரூட்டை மாத்தியுள்ளார்.

அதாவது நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்ட பலரும் பல விதமாக பேசிவருகிறார்கள். இப்படி தவறான செய்திகளைப் பரப்புவது முதலில் நிறுத்துங்கள். நான் பல மொழிப் படங்களில் நடித்துள்ளேன், எனக்கு படங்கள் மீது மரியாதை இருக்கிறது என ராசி கண்ணா கூறினார்.

மேலும் இந்த செய்தியை தவறாக புரிந்து கொண்ட அல்லது சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள் என ராசிகன்னா குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், ஒரு சிலர் ராசிக்கான பாலிவுட்டிற்கு சென்றதால் தென்னிந்திய சினிமாவைப் பற்றி இப்படி தரக்குறைவாக பேசியுள்ளார் என கூறிவருகின்றனர்.

Raashi Khanna
Raashi Khanna

Next Story

- Advertisement -