வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

ரஞ்சித்துக்கும் ரவீந்தருக்கும் முட்டிய சண்டை, அடிக்க கை ஓங்கிய முரட்டு பீஸ்.. இடையில் புகுந்து பரமபதம் ஆடிய ஜாக்குலின்

Vijay Tv Bigg Boss 8: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது நாளிலேயே சண்டைக்கும் சச்சரவுக்கும் பஞ்சமே கிடையாது என்பதற்கு ஏற்ப விடிந்தும் விடியாமல் விஷாலுக்கும் பவித்ராக்கும் சண்டை முட்டி விட்டது. அதாவது எதார்த்தமாக விஷால் டி போட்டு பவித்ராவை கூப்பிட்டது, பவித்ராவுக்கு கோபத்தை ஏற்படுத்தி விட்டது. இதனால் நீ என்னை டி என்று கூப்பிடக்கூடாது என்று கோபமாக பேசிய பவித்ராவிடம் விஷால் முட்டி மோதிக்கொண்டார்.

இவர்களுடைய சண்டை ஓரளவுக்கு முடிந்த நிலையில் மற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அவர்களுடைய வேலையை ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது வரை ஜாக்குலின் சில போட்டியாளர்களை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் நைசாக பேசி தான் என்ன சொன்னாலும் சரி என்று சொல்லும் அளவிற்கு இழுத்துக் கொண்டு வருகிறார்.

கோபத்துடன் ரவீந்தரை அடிக்க கை ஓங்கும் ரஞ்சித்

அதிலும் ஆண்கள் டீம் ஒற்றுமையாக இருந்து ஜாலியாக பேசி என்ஜாய் பண்ணி இருந்தார்கள். ஆனால் இந்த டீம்குள் பவித்ரா போனதும் ஆண்கள் டீமிடமிருந்த ஒற்றுமை காணாமல் போய்விட்டது என்பதற்கு ஏற்ப தற்போது சண்டை ஆரம்பம் ஆகிவிட்டது. அந்த வகையில் ரவீந்தர் மற்றும் ரஞ்சித்துக்கும் பெரிய அளவில் சண்டை முட்டிக்கொண்டு விட்டது. இதை தடுக்க போன அருண்பிரசாந்தை கீழே தள்ளிவிட்டு அதைக்கூட கண்டுகொள்ளாத அளவிற்கு அங்கே சண்டை பூகம்பமாக வெடித்து விட்டது.

அதிலும் ரஞ்சித், மிகப்பெரிய கோபக்காரராக ரவீந்தரை அடிக்க கை ஓங்கும் அளவிற்கு ஆவேசமாக சண்டை போட ஆரம்பிக்கிறார். நீங்கள் எதற்கெடுத்தாலும் நாட்டாமை பண்ண வேண்டாம். நீங்கள் எனக்கு பாஸ் கிடையாது ஆர்டர் போடுவதற்கு என்று கோபப்பட்டு ரவீந்தரை தாக்கி பேசுகிறார். இவர்களுடைய சண்டையை சமாதானப்படுத்தும் விதமாக மற்ற போட்டியாளர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.

ஆனால் ரஞ்சித் யார் சொல்வதையும் காது கொடுத்து கேட்காமல் நான்தான் இங்கே பெரிய ஆளு என்று சொல்வதற்கு ஏற்ப தெனாவட்டாக நடந்து கொள்கிறார். அதே மாதிரி கோபமாக இருக்கும் ரவீந்தரை சமாதானப்படுத்தும் விதமாக தர்ஷா மற்றும் ஜாக்லின் சமரசம் செய்து வருகிறார்கள். இதற்கிடையில் ஜாக்லின் அனைவரது கவனமும் தன்மீது திரும்ப வேண்டும் என்பதற்காக சின்ன விஷயத்தை பெருசாக்கி ஒரு சீன் கிரியேட் பண்ணி வருகிறார்.

ஆக மொத்தத்தில் இப்பொழுது இருக்கும் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் அஞ்சு ரூபாய்க்கு நடிக்க சொன்ன 500 ரூபாய்க்கு நடிக்கிறார்கள் என்பது போல் ஓவர் ஆக்டிங் பண்ணி வருகிறார்கள். அந்த வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை போட்டி பொறாமை என்று தந்திரமாக நரி வேலையை பார்த்து வருகிறார்கள்.

அத்துடன் உள்ளே இருக்கும் ரவிந்தர் வெளியே இருந்து எப்படி பிக் பாஸ் ரிவ்யூ கொடுத்து இருந்தாரோ, அதே மாதிரி உள்ளே போயும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் ரிவ்யூ கொடுத்து அவருடைய பாயிண்டை திணித்து மூளையை சலவை செய்து வருகிறார். எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று சொல்வதற்கு ஏற்ப யாருக்கு எந்த நேரத்தில் எவருடன் சண்டை வரும் என்று சொல்ல முடியாத அளவிற்கு ஒவ்வொருவரும் கொஞ்சம் தெனாவட்டுடன் தான் திரிகிறார்கள்.

அந்த வகையில் இப்பொழுது அருண், தீபக் மற்றும் விஷால் மக்களிடம் நற்பெயர்களை சம்பாதித்து வருகிறார்கள். பெண் போட்டியாளர்கள் யார் எப்படிப்பட்டவர் என்பதை கணிக்க முடியாத அளவிற்கு ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே விளையாடி வருகிறார்கள். பொதுவா ரஞ்சித் பொருத்தவரை கொஞ்சம் மூர்க்கத்தனமாகவும் எந்த இடத்திலும் இறங்கிப் போகாமல் தன்னுடைய கை ஓங்கி நிற்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்.

அதனால் ரஞ்சித் கேரக்டருக்கு மற்ற போட்டியார்களுடன் எப்படியாவது சண்டை வந்து கொண்டே தான் இருக்கும். அதற்கு முதல் ஆளாக ரவிந்தர் சிக்கிக்கொண்டார். இதற்கு அடுத்தப்படியாக தீபக் மற்றும் ரஞ்சித்துக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

Trending News