Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் உமையாள் ஆசைப்பட்ட மாதிரி தர்ஷினிக்கும் சித்தார்த்துக்கும் திருமணம் நடக்கப் போவதில்லை. ஏனென்றால் கதிர், சித்தார்த்தை வேறொரு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்.
இது தெரியாத உமையாள், சித்தார்த் காணாமல் போனதற்கு ஜனனியும் சக்தியும் தான் காரணமாக இருப்பார்கள் என்று ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமி இடம் கூறிவிட்டார். அதற்கேற்ற மாதிரி ஜனனியை கடத்தினால் எல்லாம் சரியாகிவிடும் என்று பக்காவா காய் நகர்த்தி மறைத்து வைத்திருக்கிறார்.
கதிர் எடுக்கப் போகும் முடிவு
இப்பொழுது ஜனனி, அஞ்சனா மற்றும் அவருடைய அம்மா எங்கே இருக்கிறார் என்று தெரியாமல் சக்தி தேடிக்கொண்டு அலைகிறார். இந்த நேரத்தில் ராமசாமி, சக்தியிடம் வந்து சித்தார்த்தை ஒழுங்கு மரியாதையா என்னிடம் ஒப்படைத்தால் நான் அவர்கள் அனைவரையும் விட்டு விடுவேன் என்று கூறுகிறார்.
ஏற்கனவே சித்தார்த்தை கதிர் தான் கடத்தி வைத்திருக்கிறார் என்ற உண்மை சக்திக்கு மட்டுமே தெரியும். அதனால் சக்திக்கு வேறு வழி இல்லை, கதிரிடம் நடந்த உண்மை அனைத்தையும் சொல்கிறார். இந்த சூழலில் கதிர், சித்தார்த்தை விட்டால் மட்டும் தான் மற்றவர்களை காப்பாற்ற முடியும். இதனால் கதிர் சித்தாரத்தை விட்டு விடுவார்.
பிறகு வீட்டிற்கு வந்த சித்தார்த்துடன் குணசேகரன் ஏற்பாடு பண்ணுன மாதிரி நிச்சயதார்த்தம் மற்றும் கல்யாண ஏற்பாடு நடக்கப் போகிறது. ஆனால் இதை தடுப்பதற்கு ஈஸ்வரி, குற்றவை மூலம் முயற்சி எடுத்து வருகிறார். அதாவது ஜீவானந்தம் பொண்ணு இருக்கும் இடத்திற்கு ஈஸ்வரி போய் பார்க்கிறார்.
ஈஸ்வரி போன இடத்தில் குற்றவை வருகிறார். பிறகு தர்ஷினி யாரை அப்பாவாக கூப்பிடுகிறார் என்ற உண்மையை சொல்லி குற்றவையிடம் உதவி கேட்கிறார். இதனை தொடர்ந்து குற்றவை தான் ஜீவானந்தத்தை கூட்டிட்டு வந்து தர்ஷினியின் கல்யாணத்தை நிப்பாட்டுவதற்கு முயற்சி எடுக்கப் போகிறார்.