காண்டம் சம்பந்தப்பட்ட சர்ச்சை படத்தில் நடிக்கும் 30 வயது நடிகை.. இவங்க சூர்யா, கார்த்தி பட ஹீரோயினாச்சே!

சமீபகாலமாக முன்னணி நடிகைகள் பலரும் சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருக்கும் ஜோடியாக நடித்த நடிகை காண்டம் சம்பந்தப்பட்ட படங்களில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய வடமாநில நடிகைகளில் மிக முக்கியமானவர் ரகுல் ப்ரீத் சிங்(rakul preet singh). கடைசியாக தமிழில் இவர் சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான என் ஜி கே என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் நினைத்த அளவுக்கு சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். அதுபோக தெலுங்கு ஹிந்தி என கைவசம் பல படங்கள் வைத்துள்ளார்.

இந்நிலையில் பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்க்ரூவாலா என்ற இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த படத்தில் காண்டம் பரிசோதனை செய்யும் அதிகாரியாக நடிக்கிறாராம்.

முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் போன்ற இருவரிடமும் இயக்குனர் கேட்டுள்ளார். ஆனால் கதாபாத்திரத்தை கேட்டு அதிர்ந்து போன இருவரும் இந்த கேரக்டரில் நடிக்க மாட்டோம் என ஒதுங்கிவிட்டார்.

ஆனால் துணிச்சலாக ரகுல் பிரீத் சிங் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க களமிறங்கியுள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காமெடி கலந்த சமூக அக்கறை கொண்ட படமாகவும் இந்த படம் உருவாக உள்ளதாம்.

rakul-preet-singh-cinemapettai
rakul-preet-singh-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்