அட்டை படத்திற்கு சட்டையை கழட்டி போஸ்.. ரகுல் ப்ரீத் சிங் பண்ணும் அலப்பறை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ரகுல் பிரீத் சிங். இவர் ‘தடையறத் தாக்க’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார் ரகுல். அது மட்டுமல்லாமல் ரகுல் தற்போது இந்தியன்-2 படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ரகுல் பிரீத் சிங் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவதோடு, பல இளசுகளை கிறங்கடித்துள்ளது.

அதாவது நடிகை ரகுல் பிரீத் சிங், ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘என் ஜி கே’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

அதேபோல் நடிகை ரகுல் பிரீத் சிங் சர்தார் கா கிரண்ட்சன், அயலான், பெயரிடப்படாத தெலுங்கு படம், அட்டாக், மே டே (May Day), தேங் காட் (Thank God) ஆகிய படங்களை தனது கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னதான் ரகுல் பிரீத் சிங் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் பிஸியாக இருந்தாலும், சமூகவலைத்தளங்களில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். அதேபோல் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை நழுவவிடாமல் பார்த்துக் கொள்வார்.

அந்த வகையில் தற்போது ரகுல் பிரபல பத்திரிக்கை நாளிதழின் அட்டைப்படத்திற்கு மேல் சட்டை மட்டும் போட்டு செம கிளாமராக போஸ் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உருக வைத்திருக்கிறார் ரகுல்.

எனவே ரகுல் ப்ரீத் சிங்கின் இந்த புகைப்படம் தற்போது இணையத்தில்  வைரலாகி வருகிறது.

- Advertisement -