ரகுல் ப்ரீத்தி சிங், ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு.. கணவனை விட இத்தனை கோடி அதிகமா?

Rakul Preet Singh, jackky Bhagnani : பாலிவுட்டில் பிரபல நடிகையான ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ஜாக்கி பக்னானி ஆகியோருக்கு கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் பணியாற்றி வருகிறார் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழில் இவர் கார்த்தியுடன் இணைந்து தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் என் ஜி கே படத்திலும் நடித்துள்ள ரகுல் ப்ரீத்தி சிங் அன்மையில் வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்திருந்தார். இப்போது ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் நடித்திருக்கிறார். இந்தி, தெலுங்கு போன்ற மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவருடைய கணவரை விட ரகுல் பிரீத்தி சிங் சொத்து மதிப்பு அதிகமாக உள்ளது. ஜாக்கி பக்னானி இந்திய தயாரிப்பாளர் வாசு பக்னானியின் மகன் ஆவார். மேலும் பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவனத்தில் முக்கியமான நிர்வாகியாக இருக்கிறார்.

Also Read : கோவாவில் காதலனை கரம் பிடித்த ரகுல் பிரீத் சிங்.. வைரலாகும் திருமண புகைப்படங்கள்

இவருக்கு 6000 சதுர அடியில் சொந்த பங்களா ஒன்று மும்பையில் உள்ளது. மேலும் போர்ஸ் கெய்ன் டர்போ, ரேஞ்ச் ரோவர் வோக், லம்போர்கினி கல்லார்டோ மற்றும் மெர்சிதாஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் மேபேக் எஸ்500 போன்ற சொகுசு கார்களை வைத்திருக்கிறார்.

அதன்படி ஜாக்கி பக்னானியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 35 கோடியாகும். ரகுல் பிரீத்தி சிங் சொத்து மதிப்பு 49 கோடி. மும்பை மற்றும் ஹைதராபாத்தில் ரகுல் பெயரில் ஆடம்பர பங்களா உள்ளது. மேலும் மெர்சிடிஸ் பென்ஸ் மேபேக் ஜிஎல்எஸ் என்ற 2.92 கோடி மதிப்புள்ள காரை 2023 இல் வாங்கி இருந்தார்.

Also Read : ரகுல் ப்ரீத் சிங் கல்யாணம், வைரலாகும் புகைப்படங்கள்.. பல கோடி செலவில் நடக்கும் பிரம்மாண்ட ஏற்பாடு

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்