கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ரட்சிதா.. பிக்பாஸ் மேடையில் போட்ட கவர்ச்சி ஆட்டம்

சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி போன்ற பல சீரியல்களில் நடித்து ஏராளமான இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள அவருக்கு ஏராளமான ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.

பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் இவர் பழகும் விதமும், நடவடிக்கையும் இவருக்கு ஆதரவை கொடுத்து வருகிறது. இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டில் இன்று ஆடியுள்ள கவர்ச்சி டான்ஸ் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது. அதில் ரட்சிதா மகாலட்சுமி யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு படு கிளாமராக ஆடி இருக்கிறார்.

Also read : கேர்ள் பிரண்டே இல்லையாம், ப்ரோ அதுல நீங்க ஒன்னாம் நம்பர்.. ரட்சிதாவை பார்த்து ஊத்திய ஜொள்ளால் மிதக்கும் பிக்பாஸ் வீடு

இந்த வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் டான்ஸ் மாரத்தான் போட்டி நடைபெற்று வருகிறது. அதில் போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக போட்டி போட்டு ஆடுகின்றனர். இதுவரை பல ஜோடிகள் ஆடிய நிலையில் இன்று ரட்சிதா மற்றும் ஜனனி இருவரும் காத்து வாக்குல இடம் பெற்றுள்ள டூ டூ என்ற பாடலுக்கு ஆடுகின்றனர்.

அதில் ஜனனி பிங்க் நிற உடையில் சமந்தாவாகவும், ரட்சிதா ப்ளூ கலர் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் மற்றும் புடவையில் நயன்தாராவாகவும் மாறி ஆடுகின்றனர். அந்த வீடியோவில் ரட்சிதாவின் ஆட்டம் ரசிகர்களை வாயை பிளக்க வைத்திருக்கிறது. ஜனனியின் பக்கம் கண்களை திருப்ப முடியாத அளவுக்கு ரட்சிதாவின் பர்பாமன்ஸ் படு பயங்கரமாக இருந்தது.

Also read : விவாகரத்தை பற்றி வெளிப்படையாக பேசிய தினேஷ்.. சர்ச்சைகளுக்கு மறைமுகமாக பதிலளித்த ரட்சிதா

கிளாமர் ஹீரோயின்களுக்கே சவால் விடும் வகையில் ரட்சிதாவின் அதிரடி ஆட்டமும், முகபாவனையும் நிச்சயம் ரசிகர்கள் எதிர்பார்க்காத ஒன்றுதான். அதிலும் அந்தப் பாடலில் விஜய் சேதுபதியாக தலைவர் ஜி பி முத்து ஒரு கேமியோ ரோல் செய்திருக்கிறார். ஏற்கனவே அவர் சென்ற வாரம் ஆண்டவரிடம் தான் ஹீரோவாக நடித்தால் ரட்சிதா மற்றும் ஜனனியை ஹீரோயினாக தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருந்தார்.

rachitha-bb6-2
rachitha-bb6-2

அதை உண்மையாக்கும் வகையில் இன்று அவர் கூறிய இரண்டு போட்டியாளர்களுடன் நடனமாடி இருக்கிறார். அந்த வகையில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த ரட்சிதாவுக்குள் இப்படி ஒரு சில்க் ஸ்மிதாவா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனாலும் அவரை குடும்ப பாங்காக பார்த்துவிட்டு இப்படி ஓவர் கிளாமராக பார்ப்பது நல்லா இல்லை என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Also read : விஜய் டிவியில் இருந்து வெளியே வந்த ரட்சிதா.. அடிச்சான் பாரு பம்பர் பிரைஸ்

- Advertisement -