ராஜுவை சீண்டிப்பார்த்த பிக்பாஸ் போட்டியாளர்கள்! மனுஷன் அப்பயும் மாறல..

விஜய் டிவியின் பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக பிக் பாஸ் சீசன்5ல் போட்டியாளர்களிடம் கொளுத்திப் போடும் வேலையை பிக்பாஸ் நன்றாக செய்து வருகிறார். அதில் நேற்றைய எபிசோடில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனித்தன்மையை இழந்து நிற்கும் இரண்டு நபர்களை தேர்வு செய்ய வேண்டும்.

இதுதாண்டா சாக்குன்னு ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ராஜுவும் அண்ணாச்சியும் தனித்தன்மையை இழந்து, முகத்துக்கு நேராக கருத்துக்களைச் சொல்வதில்லை என நாமினேட் செய்யறாங்க என்று வரிசையாக குற்றம்சாட்டினர். முதலில் ராஜு மேல செம காண்டில் இருக்கும் பிரியங்கா தான் இதனை தொடங்கி வைக்கிறார். அதன்பின் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரண்டு நபர்களுக்கும் ஒரு தண்டனை அளிக்கப்படுகிறது என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதில் ராஜுவும் அண்ணாச்சியும் தேர்ந்தெடுக்கப்பட்டு தண்டனையை அனுபவிக்க தயாராகிறார்கள். அந்தத் தண்டனையில் இரவில் ஒரு நாற்காலியில் தண்டனைக்குரியவர்களை அமரவைத்து அவர்கள் மேல் பச்சை தண்ணீரை ஊற்ற வேண்டும் என்பதே. பாவம் இந்த கடும் மழையிலும் குளிரிலும் அவர்களுக்கு கிடைத்த இந்த தண்டனை நியாயமானதாக தெரியவில்லை.

ஏனெனில் எப்பொழுதும் அண்ணாச்சி தன் கருத்தை முகத்திற்கு நேராகவே சம்பந்தப்பட்ட நபரிடம் கூறி அதற்காகவே நாமினேஷன் லிஸ்டிலும் வருவதுண்டு. ஆனால் அவரை பார்த்து கருத்தை தெரிவிப்பதில்லை எனக்கூறி தண்டனை அளிப்பது சரியான ஒன்றாகத் தோன்றவில்லை.

அப்படிப் பார்த்தால் போட்டியாளர் மதுமிதா பிக்பாஸ் வீட்டில் எப்பொழுதும் மற்றவரின் கைப்பாவையாக தான் இருந்து வருகிறார். தனது தனித்தன்மையையோ கருத்துக்களையோ வெளிக்கொணர்வதில்லை. மேலும் தண்டனையை தாமரை ராஜுவுக்கு அளிக்கும் பொழுது செருப்பு கழட்டி அடிச்சுக்கணும்னு ராஜு, அவரையே அவர் திட்டிக் கொள்கிறார்.

இதிலிருந்து ராஜு இந்த தண்டனையை குறித்தும் மற்றவர்கள் தன்னைப் பற்றி கருதுவது குறித்தும் எவ்வளவு காண்டா இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இனி நடக்கப்போகும் சம்பவங்களை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்