பிக் பாஸ் சீசன்5ல் பிரியங்காவின் கண்ணாடியாக மாறி.. ராஜு செய்த அட்ராசிட்டி!

விஜய் டிவியில் பிரபலமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன்5 தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் பல புதிய புதிய டாஸ்க்குகளை தந்து மேலும் மக்களை என்டர்டெய்ன் செய்து வருகின்றனர். அந்த விதமாக இந்த வார லட்சரி பட்ஜெட் டாஸ்க் இல் ‘உள்ளதை உள்ளபடி காட்டும் கண்ணாடி’ என்ற ஒரு புதுவிதமான போட்டியை கொடுத்து போட்டியாளர்கள் இடம் சண்டை மூட்டி விடும் வேலையை நன்றாக தொடங்கிவிட்டார் பிக் பாஸ்.

இந்த டாஸ்க் இல் இரண்டு அணிகளாக போட்டியாளர்கள் பிரிந்து மற்ற அணியில் உள்ள நபர்களின் கண்ணாடியாக மாறி அவர்களை பிரதிபலிக்க போகிறார்கள்.  அதில் முதல் அணியில் சிபி, பாவணி, பிரியங்கா, இசைவாணி மற்றும் ஐக்கி ஆகியோரும், இரண்டாவது அணியில் அக்ஷரா, அபினை, இமான், ராஜூ, தாமரை மற்றும் வருண் ஆகியோரும் உள்ளனர்.

இதில் முதல் அணி போட்டியை தொடங்கி நேற்று பல ஜாலியான சம்பவங்களுடன் சென்றது. ஆனால் அவர்களையும் மிஞ்சும் அளவிற்கு இரண்டாவது அணி அற்புதமாக விளையாடி மக்களையும் பெரிதும் என்டர்டெய்ன் செய்தனர்.

மேலும் முதல் அணி நேற்று போட்டியின் அர்த்தத்தை உணராமல், தாங்கள் கண்ணாடியாக பிரதிபலிக்க போகிறவர்களின் செயல்களை மட்டுமே பிரதிபலித்தனர். ஆனால் இரண்டாவது அணியோ போட்டியை தெளிவாகப் புரிந்து தாங்கள் பிரதிபலிக்க வேண்டிய நபர்களின் நடை, உடை, பாவனை என அனைத்தையும் அப்படியே செய்து அசத்தினர்.

இந்த இரண்டாவது நாள் போட்டியில் பிக்பாஸ், கண்ணாடியாக பிரதிபலிக்க வேண்டிய ஜோடிகளில் மாற்றம் செய்து மேலும் டாஸ்கை விறுவிறுப்பு ஆக்கினார்.  அந்த விதமாக ராஜு- பிரியங்காவின் கண்ணாடியாகவும், அண்ணாச்சி- ஐக்கி போலவும், அக்ஷரா- பாவணி போலவும், அபினை- சிபி போலவும், வருண்- நிரூப் போலவும் அச்சு அசலாக மாறி தாங்கள் கண்ணாடியாக மாறி பிரதிபலிக்க வேண்டிய நபர்களின் உள்ளக் கருத்தை அழகாக பிரதிபலித்தனர்.

அதிலும் ராஜூ பிரியங்காவை போலவே செய்தது மிகவும் தரமான சம்பவமாக இருந்தது. ராஜு பிரியங்காவின் உள்ள கருத்தை அழகாக புட்டுப்புட்டு வைத்தார். இதனால் பாவணிக்கும் ராஜுவுக்கும் பெரிய சண்டையே வந்துவிட்டது. பிக்பாஸ் நினைத்ததும் நடந்துவிட்டது.மேலும் இந்த இரண்டாவது அணியே இந்த வார டாஸ்க்கை வெல்வார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்