ராஜு பாய், பாவனி லவ் ட்ராக்.. முற்றுப்புள்ளி வைத்த அபினை மனைவி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே சீசன் 1 இல் இருந்து ஏதாவது ஒரு லவ் ட்ராக் இருக்கும். ஒவ்வொரு நாளும் பல சுவாரசியங்கள் உடன் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வில் ட்ருத் அண்ட் டேர் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அந்த டாஸ்கிங் ராஜு பாட்டிலை சுற்றும் பொழுது அபிநயிடம் சென்றது. ராஜு அபிநயிடம, பவானியை லவ் பண்றீங்களா என கேட்டார். உடனே ஹவுஸ் மேட்ச் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்தக் கேள்வியை சற்றும் எதிர்பாராத அபிநவ் என்ன சொல்வது என ஒரு நிமிடம் யோசித்து பின்பு இல்லை என்று பதில் சொன்னார்.

அபினை ஏற்கனவே திருமணமானவர், இவருக்கு மனைவி, குழந்தை உள்ளது, பாவனி ஏற்கனவே கணவனை இழந்துள்ளார், இவர்களைப் பார்த்து நீ எப்படி இந்த கேள்வி கேட்கலாம் என பிரியங்கா, ராஜுவிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த ராஜு, இந்த விளையாட்டின் போது என் மனதில் பட்டதை எதார்த்தமாக கேட்டேன். நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாது என்று கூறினார்.

ராஜு அந்த கேள்வி கேட்ட பின்பு ஹவுஸ் மேட் அனைவரும் அபிநயா சற்று அதிகமாகவே கவனிக்க ஆரம்பித்தார்கள். அபினை, பாவனியிடம் கூடுதலாக பாசம் வைத்திருப்பது உண்மைதானோ என ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் நினைக்க வைத்தது. நெட்டிசன்கள் இவர்கள் காதலிப்பது உண்மை போல பல மீம்ஸ்கள் உருவாக்கி இணையத்தில் வெளியானது.

இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அபினை மனைவி அபர்ணா இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை சேர் செய்துள்ளார். அதில், உன்னைப்பற்றி எனக்கு தெரியும், என் அளவிற்கு உன்னை யாருக்கும் தெரியாது, எப்போதும் லவ் யூ, அபர்ணா அபினை மற்றும் அபினை டீம் என குறிப்பிட்டிருந்தார். அபினை, அபர்ணா மற்றும் அவர்களது மகளுடன் இருக்கும் புகைப்படத்தையும் அபர்ணா பதிவிட்டிருந்தார்.

ஆரம்பத்தில் சரியாக விளையாடாத அபினை ஒவ்வொரு வாரமும் நாமினேசன் லிஸ்டில் கட்டாயம் இருப்பார். தற்போதுதான் கேமை புரிந்தபடி விளையாடி வருகிறார்.
தற்போது ராஜு கேள்வியால் நாமினேட் லிஸ்டில் இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அபினை மீது யார் நம்பிக்கை வைக்கா விட்டாலும் அவரது மனைவி அபர்ணா அபினை மீது முழு நம்பிக்கை வைத்துள்ளார்.