பிக் பாஸ் ஆட்டத்தையே தலைகீழாக மாற்றி ஆடும் ராஜு பாய்.. இது தப்பாச்சே!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன்5 நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நாளுக்கு நாள் சுவாரசியத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் வீட்டில் யார் பகல் நேரத்தில் அதிகம் தூங்குகிறார்கள் என்று பிக்பாஸ் கேட்டதற்கு பிரியங்கா மற்றும் நிரூப் என்றும், யார் மைக்கை ஒழுங்காக மாற்றவில்லை என்ற கேள்விக்கு பிரியங்கா மற்றும் அபிஷேக் இருவரையும் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் சுட்டிக்காட்டினர்.

அதேபோன்று சுவாரசியம் குறைந்த நபர் சுருதி என்றும் ஆங்கில வார்த்தை அதிகம் பயன்படுத்தும் நபர் அபினை என்றும் பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்கள் குற்றம்சாட்டினர். இது ஒருபுறமிருக்க பிக் பாஸ் வீட்டில் நேற்று ராஜு தன்னுடைய காமெடி திறமையினால் சக போட்டியாளர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது, பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்களுக்கும் நல்ல என்டர்டைன்மென்ட் ஆக இருந்தது.

ஏனென்றால் கார், பைக், மைக் டெஸ்டிங் போன்றும் எம் ஆர் ராதா, ரஜினி, எஸ்ஜே சூர்யா போன்றோர் குரலில் ராஜு மிமிக்ரி செய்து தன்னுடைய திறமையை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெளிச்சம் போட்டு காண்பித்தார். இந்த காட்சியை பார்த்த ஹவுஸ்மேட்ஸ்களும் ரசிகர்களும் ராஜுவின் திறமையை பார்த்து  கைத்தட்டி மனம்விட்டு சிரித்தனர்.

ஆனால் நான்கு குள்ளநரிகள் மட்டும் இதிலிருந்து ஒதுங்கிச் சென்று ராஜுவை கலாய்த்தனர். ஏனென்றால் பிரியங்கா, அபிஷேக், அபினை, நிரூப் ஆகிய 4 பேரும் ராஜுவை ஓரம்கட்ட முயற்சித்தாலும் அதனால் அவர்களுக்கு ஏமாற்றமே கிடைத்துக் கொண்டிருக்கிறது.

raju-cinemapettai11
raju-cinemapettai11

அத்துடன் கடந்த சீசனில் சாண்டி இதே போன்று தான் மக்களை மகிழ்வித்தது போன்று, இந்த சீசனில் ராஜு தன்னுடைய திறமையை சிறப்பாக வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார். இவர் வீட்டில் மற்ற போட்டியாளர்கள் இடம் பழகும் விதமும், நேற்று பிரியங்கா சாப்பிட ஏதாவது வேண்டும் என்று அழுததும் உடனே அவருக்கு வேண்டியதைச் சமைத்துக் கொடுக்க முன் வந்ததை பார்க்கவே அழகாக இருந்தது.

எனவே பிக் பாஸ் ஆட்டத்தை ராஜு தன்னுடைய தோனியில் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார். இதனால் மக்களின் மத்தியிலும் அவருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. எனவே அடிதடி சண்டை, புறணி பேசுதலை எல்லாம் தவிர்த்து, பிக்பாஸ் ஆட்டத்தை தலைகீழாக மாற்றி ஆடிக்கொண்டிருக்கும் ராஜுவின் சினிமா பயணம் சிறப்பாக அமையும். ஏனென்றால் அவர் வெளியே வந்ததும் தயாரிப்பாளர்கள் நீ நான் என்று போட்டி போட்டுக்கொண்டு வாய்ப்புத் தர காத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை ரசிகர்களின் கணிப்பு.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்