கதிரை ஜெயிலுக்கு அனுப்பிய ராஜியின் அப்பா.. மயிலை வைத்து சரவணனுக்கு வலை விரிக்கப் போகும் மாமியார்

Pandian Stores 2: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் சீசன் 2 சீரியலில் ராஜியின் அண்ணன் குமரவேலு, ராஜியை அடிக்கும் போது தெரியாத்தனமாக பாண்டியன் மீது அடி விழுந்து விட்டது. இதை பார்த்த கதிர் கோபத்தில் நடந்த விஷயத்தை செந்திலிடம் சொல்கிறார். உடனே செந்தில் அவனை சும்மா விடக்கூடாது என்று சரவணனை தேடி போகிறார்கள்.

இதற்கு இடையில் சரவணன் நிச்சயதார்த்தம் பண்ணி வந்த பிறகு தங்கமயிலை நினைத்து உருகுகிறார். அத்துடன் போன் பண்ணியும் பேசுகிறார். பிறகு இதுதான் சான்ஸ் என்று தங்கமயில், சரவணனை பார்க்க கிளம்புகிறார். உடனே தங்க மயிலின் அம்மா, மாப்பிள்ளையை பார்க்கும்போது சும்மா போகாதே என்று கொழுக்கட்டை பண்ணி கொடுக்கிறார்.

எப்படியாவது இந்த கல்யாணம் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிக்க வேண்டும். அதற்கு நீ இப்பொழுதே மாப்பிள்ளை மனதில் நல்லா இடத்தை பிடித்துக்கோ. எந்த பிரச்சினை வந்தாலும் மாப்பிளை உன் பக்கம் நிற்கிற மாதிரி வைத்துக் கொள் என்று மகளுக்கு தூபம் போட்டு அனுப்புகிறார்.

ராஜி சொல்ல போகும் உண்மை

அந்த வகையில் சரவணன் வைத்து பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய ஆப்பை தயார் பண்ண போகிறார். இது தெரியாமல் பாண்டியன் குடும்பம் தங்க மயிலின் குடும்பத்தை ஆகோ ஓஹோ என்று பாராட்டுகிறார்கள். அடுத்ததாக சரவணனை பார்க்க வந்த தங்கமயில் கடையில் வைத்து ரொமான்ஸ் பண்ணுகிறார்கள்.

பிறகு கதிர் மற்றும் செந்தில் கடைக்கு வந்து சரவணன் இடம் நடந்த விஷயத்தை சொல்கிறார்கள். உடனே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து ராஜியின் அண்ணனை அடிக்க பிளான் பண்ணி அடித்து விடுகிறார்கள். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட ராஜியின் அப்பா மருமகன் என்று கூட பாராமல் பாண்டியனின் மகன்களை ஜெயிலுக்கு அனுப்பி விடுகிறார்.

உடனே பாண்டியன் மகன்களை காப்பாற்றுவதற்காக போலீஸ் ஸ்டேஷன் போகிறார். ஆனால் போலீஸ் இந்த விஷயத்தை கோர்ட்டில் நீங்கள் டீல் பண்ணிக்கோங்க என்று சொல்லிவிடுகிறார். பிறகு ராஜிதான் அவருடைய அப்பாவை சந்தித்து நடந்த உண்மைகளை சொல்லி கதிரை காப்பாற்ற முயற்சி எடுக்கப் போகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்