தலைவர் 171 இல் கமிட்டான 7 பிரபலங்கள்.. பக்காவாக தூண்டில் போட்ட லோகேஷ்

Lokesh Kanagaraj : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ஹீரோவாக தலைவர் 171 படத்தில் களம் இறங்குகிறார். லோகேஷ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக இந்த படம் உருவாக உள்ளது.

சமீபத்தில் தலைவர் 171 படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்தது. ஒரு சல்லடை போட்டு தேடி லோகேஷ் பக்காவாக தலைவர் 171 படத்திற்கான பிரபலங்களை தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இப்படத்தில் தற்போது ஏழு பேர் கமிட்டாகி இருக்கின்றனர்.

அதாவது லியோ படத்தில் தனது நடிப்பு திறமை மூலம் மிரள விட்ட சாண்டி மாஸ்டர் இந்தப் படத்தில் இடம்பெறுகிறார். இதை தொடர்ந்து சமீபத்தில் மலையாளத்தில் பெரும் வரவேற்பு பெற்று வரும் ஆடுஜீவிதம் படத்தில் நடித்த பிருத்விராஜ் சுகுமார் நடிக்கிறார்.

தலைவர் 171இல் சிவகார்த்திகேயன்

மேலும் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதைத்தொடர்ந்து ஜெயிலர் படத்தில் சிவகார்த்திகேயன் இடம் பெறுவார் என எதிர்பார்த்த நிலையில் தலைவர் 171 இல் நடிக்க வைக்கிறார் லோகேஷ்.

இவர்களைத் தொடர்ந்து நடிகை திரிஷா மற்றும் ஷோபனா ஆகியோர் நடிக்க உள்ளனர். ரஜினியின் தீவிர ரசிகனாக இருக்கும் ராகவா லாரன்ஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய அங்கமாக இருக்க உள்ளார்.

மேலும் இப்போதே பிரபலங்களின் தேர்வால் தலைவர் 171 படம் கலைகட்டி இருக்கிறது. அடுத்தடுத்து யார் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கூடுதலாக உள்ளது. அதோடு விரைவில் தலைவர் 171 படத்திற்கான டைட்டில் வீடியோ வெளியாக இருக்கிறது.

Next Story

- Advertisement -