நெல்சனிடம் ரஜினி போட்ட ஆர்டர்.. ஜெயிலர் படத்தில் வேண்டுமென்றே நீக்கப்பட்ட செல்லப்பிள்ளை

Rajini’s Order To Nelson: 72 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என ரஜினி மிரட்டிவிட்ட படம் தான் ஜெயிலர். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால் இந்த படத்தில் வேண்டுமென்றே ரஜினி, இளம் நடிகர் ஒருவரை நடிக்க விடாமல் செய்திருக்கிறார்.

ஆனால் அந்த இளம் ஹீரோவை எப்படியாவது நடிக்க வைக்க வேண்டும் என நெல்சனும் எவ்வளவோ போராடி இருக்கிறார். ஆனா முடியவே முடியாது என்று நெல்சனிடம் சூப்பர் ஸ்டார் ஸ்டிட்டா ஆர்டர் போட்டுவிட்டார். ஜெயிலர் படத்திற்கு பிறகு ரஜினி டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்குப் பிறகு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் இணைகிறார். இந்த படத்தில் தான் ரஜினியுடன் சிவகார்த்திகேயனும் இணைந்து நடிக்கிறார். ஆனால் இதற்கு முன்பே ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.

Also read: தோல்விக்குப்பின் தரமான சம்பவம் செய்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. விஜய்யின் வசூலை சரி கட்டிய ஜெயிலர்

நெல்சனிடம் ஆர்டர் போட்ட சூப்பர் ஸ்டார்

நெல்சன், சிவகார்த்திகேயன், அனிருத் மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஆரம்பத்தில் இருந்தே சிவகார்த்திகேயனுக்கு ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய நீண்ட நாள் ஆசை. ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடிகர் வசந்த் ரவி நடித்த கேரக்டரில் முதலில் சிவகார்த்திகேயனை தான் நடிக்க வைக்க நெல்சன் திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ரஜினி நெல்சனிடம் சிவகார்த்திகேயனுக்கு நெகட்டிவ் கேரக்டர் வேண்டாம். டேலண்ட் ஆன அந்த பையன் திரையுலகில் நல்லா வளர வேண்டும். இந்த கேரக்டர் அவருடைய சினிமா கேரியரை கேள்விக்குறியாகிவிடும், அதனால் வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்கலாம் என்று நெல்சனிடம் திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

இப்போது இமான் பிரச்சனையில் சிவகார்த்திகேயன் மிகவும் துவண்டு போயிருக்கிறார். அவரை தூக்கி விட வேண்டும் என்பதற்காக தலைவர் 171 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ரஜினி முடிவெடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு ரஜினியின் செல்லப் பிள்ளையான சிவகார்த்திகேயனின் ரேஞ்ச் எங்கேயோ போகப் போகிறது.

Also read: இமானுக்கு முடிவு கட்ட நாள் குறித்த SK.. மொத்தமாக முற்றுப்புள்ளி வைக்க வரும் அயலான்