தோல்விக்குப்பின் தரமான சம்பவம் செய்து வெற்றி கண்ட 5 இயக்குனர்கள்.. விஜய்யின் வசூலை சரி கட்டிய ஜெயிலர்

Kollywood Directors hit movies released in 2023: தலைவர் “கபாலி”யில், வந்துட்டேன்னு சொல்லு திரும்பி வந்துட்டேன்னு சொல்லு எப்படி போனேனோ அப்படியே திரும்பி வந்துட்டேன்னு சொல்லு  நெருப்புடா! என்று  ரசிகர்களை சூடேற்றி இருந்தார். அதே போல் இன்றைய இளம் இயக்குனர்கள் சிலர் சற்றே சறுக்கி இருந்தாலும் மீண்டும் கம்பேக் கொடுத்து தனது திறமையை நிரூபித்து உள்ளனர்.

ஆதிக்ரவிச்சந்திரன்: திரிஷா இல்லனா நயன்தாரா என்ற படத்தின் மூலம் அறிமுகமான ஆதிக் ரவிச்சந்திரன் அவர்கள் முதல் படத்தை வெற்றியோடு கொடுத்துவிட்டு அடுத்தடுத்து சில படங்களில் தொடர் தோல்வி கண்டார். பின் பிரபுதேவாவின் நடிப்பில் பஹீரா படத்தை இயக்கினார். இப்பட கதையை பற்றி பேசும்போது கதை என்ன ஜானர் என்று தெரியவில்லை என்று பஹீரா பற்றி பகிரங்கமாக அறிவித்தார். இப்படம் தோல்வியை தழுவ வருத்தமடைந்த ஆதிக், தளராத மனதுடன் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா மற்றும் விஷாலின் கூட்டணியுடன் மார்க் ஆண்டனியை இயக்கினார். சயின்ஸ் பேஸ்டு ஆக்சன் ஃபிலிம் ஆனா மார்க் ஆண்டனி வசூலில் 98 கோடியை தாண்டி வெற்றி நடை போட்டது.

S U அருண்குமார்: பண்ணையாரும் பத்மினியும் படம் மூலம் முத்திரை பதித்த  அருண்குமார் அவர்கள் தொடர்ந்து சேதுபதி, சிந்துபாத் படத்தை இயக்கினார். சிந்துபார்த்தில் தனது திறமையை நிரூபிக்க தவறிய அருண்குமார் ஒரு நீண்ட இடைவெளிக்கு பின் அடுத்த படமான சித்தாவின் மூலம் அனைவரையும் பேச வைத்தார். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட சித்தார்த் நடித்த சித்தா திரைப்படம் பல நேர்மறையான விமர்சனங்களை பெற்றது.

Also read: வருட கணக்காக ரிலீஸ் பண்ண முடியாமல் கோடிக்கணக்கில் நஷ்டத்தில் 5 படங்கள்.. பிரசாந்த்தின் கெட்ட நேரம்

யுவராஜ் தயாளன்: “போட்டா போட்டி” படத்தில் இயக்குனராக அறிமுகமான யுவராஜ் தயாளன் தொடர்ந்து வடிவேலுவுடன் சேர்ந்து தெனாலிராமன் மற்றும் எலி போன்ற படங்களை இயக்கினார். 2015 இல் வெளிவந்த எலி எதிர்மறையான விமர்சனங்களை பெற்றதோடு வணிக ரீதியாகவும் வெற்றி பெறவில்லை. இதனால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த யுவராஜ் அவர்கள் எட்டு வருடங்களுக்கு பின் குடும்ப பங்கான இறுகப்பற்று கதையை கையில் எடுத்தார். திருமணத்திற்கு பின் வரும் பிரச்சனைகளுக்கு விவாகரத்து என்றும் தீர்வாகாது என்று அனைவரும் அறிந்ததை புதுமையான கோணத்தில் கூறி படத்தை வெற்றி பெறச் செய்தார்.

ஹச் வினோத்:  சிறப்பான கதையை வித்தியாசமாக சொல்பவர் ஹச் வினோத். சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை கொடுத்த வினோத் அஜித்தின் வலிமையில் கொஞ்சம் வலிமை இழந்து போனார். படத்தின் படத்தின் தோல்விக்கு பல காரணங்கள் பேசப்பட்டாலும் அதை தள்ளி வைத்து மீண்டும் அதே கூட்டணியுடன் துணிவை துணிந்து எடுத்து வெற்றி பெற்றார்.

நெல்சன்: கோலமாவு கோகிலா உடன் அறிமுகமான நெல்சன் தொடர்ந்து டாக்டர் படத்திலும் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார் அடுத்ததாக விஜய்யுடன் பீஸ்ட் இல் கைகோர்த்தார், பீஸ்ட் வசூலில் நல்லவரவேற்பு பெற்றிருந்தாலும் படம் குறித்து பல எதிர்மறையான விமர்சனங்களை நெல்சன் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் உடன் ஒப்பந்தமாகி ரஜினி நடிக்க இருந்த ஜெயிலரிலிருந்து, விலகுவதாக நெல்சன் அறிவித்தார் இதனை ஏற்காத சூப்பர் ஸ்டார் நெல்சனை உற்சாகப்படுத்தி மீண்டும் அவரை ஜெயிலரில்  கம்பேக் கொடுக்க வைத்தார். பல்வேறு திருப்பங்கள் உடன் ஆக்சன் பிக்சராக களம் இறங்கிய ஜெயிலர் எதிர்பார்த்ததைவிட உலக அளவில் 650 கோடி வசூலித்து சாதனை புரிந்தது.

Also read: 32 வருடங்களுக்குப் பின் இணையும் ரெண்டு சூப்பர் ஸ்டார்கள்.. தலைவர் பட அடுத்த வில்லனை உறுதி செய்த படக்குழு

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்