அஜித்தை கூப்பிட்டு ரஜினி சொன்ன அறிவுரை.. தப்பை சரிசெய்து இன்றுவரை அதே கோட்டில் நிற்கும் அஜித்

அஜித் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பரவி வருகிறது. மேலும் அவர் தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படங்களும் வெளியாகி வருகிறது. ஆனால் அஜித் எந்த சமூக வலைத்தள பக்கத்திலும் இடம்பெறவில்லை.

மேலும் அஜித் படத்தை பற்றிய தகவலை அவரது மேனேஜர் தான் பதிவிடுவார். அஜித் எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை என்று அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தன்னுடைய பட ப்ரொமோஷனுக்கு கூட அஜித் கலந்து கொள்ளாதது ஏன் என்ற குழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

Also Read :அஜித்திற்காக விட்டுக்கொடுத்த விஜய்.. இப்படிப்பட்ட மனசு யாருக்கு வரும்

அஜித் கிட்டத்தட்ட நான்கு மொழிகள் சர்வசாதாரணமாக பேசக்கூடியவராம். அதாவது தமிழ், மலையாளம், இங்கிலீஷ், ஹிந்தி போன்ற மொழிகள் அஜித்துக்கு தெரியுமாம். ஆரம்பத்தில் பத்திரிக்கையாளர்களிடம் அஜித் நண்பர்கள் போல பழகுவாராம். அவர்கள் எந்த கேள்வி கேட்டாலும் சற்றென்று பதில் சொல்வாராம்.

அதுமட்டுமின்றி தன்னுடைய படத்திற்கு படம் பத்திரிக்கையாளரை தானே அழைத்து பேட்டி கொடுத்தார். அப்போது தேவையில்லாமல் நிறைய பேட்டி கொடுத்து வந்துள்ளார். அதை பத்திரிக்கையாளர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தவறாக எழுதி உள்ளனர்.

Also Read :விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

தொடர்ந்து அஜித்தின் பேச்சு பத்திரிகையாளர்களுக்கு தீனி போட்டது போல் இருந்துள்ளது. இதையெல்லாம் பார்த்த ரஜினி வளரும் நடிகர் என யோசித்து அஜித்துக்கு போன் செய்த அறிவுரை கூறியுள்ளார். அதிலிருந்து ரஜினியின் பேச்சை கேட்டு அஜித் வேறொரு ரூபமாய் மாறிவிட்டார்.

அதாவது தனது சொந்த வாழ்க்கையை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்வார். அதேபோல் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத அஜித், பிரபலங்களின் துக்க நிகழ்வில் கண்டிப்பாக கலந்து கொள்வார். இவ்வாறு தப்பை சரி செய்து இன்றுவரை தனக்கான கோட்டில் அஜித் பயணித்து வருகிறார்.

Also Read :ரஜினிகாந்தின் மகளுக்கு நாற்காலி கொடுக்காத பிரபல இயக்குனர்.. கொதித்தெழுந்த ரஜினிகாந்த்.!

Next Story

- Advertisement -