கழுதைக்கு வாக்கப்பட்டால் அடியும் உதையும் வாங்கி தான் ஆகணும்.. ஒரே பாட்டால் ஐட்டம் நடிகையாகவே மாறிய ரஜினி பட வில்லி

ஐட்டம் நடிகை என்றாலே நமக்கு ஒரு சில நடிகைகள் உடனே ஞாபகத்துக்கு வந்து விடுவார்கள். அதேபோல அந்த நடிகைகளும் தொடர்ந்து கவர்ச்சியாக படு ஜோராக ஆடியிருப்பார்கள். அப்படி ஐட்டம் பாடலுக்கு ஆடிவிட்டால் அடுத்து எந்த படங்களிலும் ஹீரோயினாக அவர்களால் வர முடியாது. அவர்களுக்கு வரக்கூடிய வாய்ப்பு ஐட்டம் சாங்காகவே வரும்.

இந்த மாதிரி லிஸ்டில் வந்துட்டு போனவங்க நிறைய பேர் இருக்காங்க. அப்படித்தான் இந்த ஒரு நடிகையும் மற்றும் ரஜினி படத்தின் வில்லியாக நடித்தவரும் இதில் மாட்டிக் கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் சூதானமாகி இந்த வம்பே வேண்டாம் என்று தலை தெறித்து ஓடி விட்டார்.

Also read: ரஜினியை மீறி நினைத்ததை சாதித்த நெல்சன்.. ஜெயிலரில் நண்பனுக்காக செய்த சம்பவம்

ஆனால் சினிமாவில் இவர் 14வது வயதில் ஹீரோயினாக அடி எடுத்து வைத்தார். அதன் பின் இவருடைய முகபாவனை மற்றும் எதார்த்தமான நடிப்பால் அனைவரையும் ஈசியாக கவர்ந்து விட்டார். இப்படி நல்லா போய்க் கொண்டிருந்த நேரத்தில் இவருடைய சினிமா கேரியரில் கும்மி அடிக்கும் விதமாக திடீரென்று ஒரு பாட்டுக்கு மட்டும் ஐட்டம் டான்ஸ் ஆட வேண்டும் என்று இவருக்கு அழைப்பு வந்தது.

அப்பொழுது இவருக்கு தோன்றியது ஒரே ஒரு விஷயம் தான். அதாவது கழுதைக்கு வாக்கப்பட்டால் அடியும் உதையும் வாங்கி தான் ஆகணும். அதேபோல் சினிமாவிற்குள் வந்துவிட்டால் எல்லாத்தையும் தாண்டி தான் வரணும் என்று முடிவெடுத்து ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்கு ஒத்துக் கொண்டார்.

Also read: ரஜினி வில்லனை நோக்கி படையெடுக்கும் இயக்குனர்கள்.. முதல் ஆளாக முந்தி கொண்ட கே எஸ் ரவிக்குமார்

அப்படி இவர் ஆடிய அந்த ஐட்டம் சாங் பட்டி தொட்டி எல்லா பக்கமும் பறந்தது. பிறகு சொல்லவா செய்யணும் அவரை ஐட்டம் பாடலுக்கு மட்டும் ஆடுவதற்காகவே யூஸ் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அந்த நடிகை வேறு யாருமில்லை கேப்டன் பிரபாகரன் படத்தில் “ஆட்டமா தேரோட்டமா” என்ற பாடலுக்கு ஆடிய ரம்யா கிருஷ்ணன் தான்.

இந்தப் பாடலை தொடர்ந்து குத்து, நரசிம்மா அதிலும் ரிதம் படத்தில் “ஐயோ பத்திக்கிச்சு” என்ற பாடல் நாலா பக்கமும் பரவி இவருடைய பேச்சு தான் அடிபட்டது. அதன் பின் இவருக்கு தொடர்ந்து இந்த மாதிரியான வாய்ப்புகளை வந்தது. பின்பு சுதாகரித்துக் கொண்ட ரம்யா கிருஷ்ணன் இனிமேல் ஐட்டம் பாடல் என்றால் யாரும் என் வீட்டைத் தேடி வர வேண்டாம் என்று ராஜமாதா அனைவருக்கும் கட்டளை இட்டு விட்டார்.

Also read: மாலத்தீவில் நடக்க போகும் ரம்யா கிருஷ்ணன் மகனின் நிச்சயதார்த்தம்.. கடைசியாக விலை போன 43 வயது முத்தின கத்திரிக்கா

Next Story

- Advertisement -