சன் பிக்சர்ஸ்கே கட்டளை போட்ட ரஜினிகாந்த்.. இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேபோல் வசூலும் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை.

இதனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதை ஈடு செய்வதற்காக ரஜினிகாந்திடம் மீண்டும் தன் நிறுவனத்துடனும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என சன் பிக்சர்ஸ் கோரிக்கை வைத்தது. அதற்கு ரஜினி ஒத்துக் கொண்டதால் தலைவர் 169 படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

மேலும் இப்படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தளபதி விஜய் தற்போது ரஜினி சம்பளத்தை விட அதிகமாக வாங்குகிறார். அதாவது வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்காக 125 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். இதனை அறிந்த ரஜினிகாந்த் எப்போதும் தனக்கு தான் அதிக சம்பளம் கொடுக்க வேண்டும்.

ஆனால் தற்போது இளம் நடிகர்கள் தன்னை விட அதிகமாக சம்பளம் பெற்றால் தனது மார்க்கெட்டும், அந்தஸ்தும் போய்விடும் என்ற அச்சத்தில் உள்ளார். இதனால் சன் பிக்சர்ஸ் இடம் தலைவர் 169 படத்திற்கு 150 கோடி சம்பளமாக கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

அதற்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்துள்ளது. அதன் பிறகு ரஜினியிடம் நீங்கள் சம்பளம் கேட்டபடி கொடுக்கிறோம். ஆனால் ஒரு கண்டிஷன் என கூறியுள்ளனர். அதாவது தலைவர் 169 படம் வெளியான பிறகு பெரிய அளவில் ஓடவில்லை என்றால் உங்கள் சம்பளத்தில் பாதியை திருப்பி கொடுத்துவிட வேண்டும் என கூறியுள்ளனர்.

இதற்கு ரஜினியின் சரி என்று சொன்னதாக கூறப்படுகிறது. இவ்வாறு நெல்சனை நம்பி ரஜினி மிகப் பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார். இதனால் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் மட்டுமே ரஜினிக்கு முழுத்தொகையும் சன் பிக்சர்ஸ் கொடுக்கும்.

Next Story

- Advertisement -