லால் சலாம் படத்தால் தலைவலியில் ரஜினிகாந்த்.. மகளுக்காக சூப்பர் ஸ்டார் அனுபவிக்கும் ரண வேதனை

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் இன்னும் சில மாதங்களில் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாக உள்ளது. அதற்காக இந்த படத்திற்கு தேவையான அனைத்து கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து இருக்கிறார்.

ஆனால் ஐஸ்வர்யா இந்த படத்தை என்ன கோணத்தில் எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை. ஏனென்றால் ரஜினி இவரது மகளின் மேல் இருந்த நம்பிக்கையால் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தை ஒப்புக் கொண்ட இவர் இன்னும் இந்த படத்திற்கான கதையே புரியாமல் குழம்பி வருகிறார்.

Also readலால் சலாம் படத்திற்கு சூப்பர் ஸ்டார் வாங்கிய சம்பளம்.. கெஸ்ட் ரோலுக்கு இத்தனை கோடியா!

அதனால் இந்த படத்திற்கான அனைத்து வேலைகளையும் ஐஸ்வர்யா மட்டும்தான் எடுத்து போட்டு செய்கிறார். அதனால் மிகவும் டென்ஷனாக பட வேலைகளை பார்த்து வருகிறார். இந்த டென்ஷன் காரணமாக சில பிரச்சினைகளையும் செய்து வருகிறார். அது மட்டுமல்லாமல் எந்த ஒரு விஷயமும் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுகிறார். இதனால் படப்புழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இது ஒரு புறம் இருக்க ஐஸ்வர்யா மற்றவர்களை மதிக்க மாட்டிக்கிறார். இந்த மாதிரி இவரின் செயல்கள் இருப்பதால் ரஜினிக்கு பெரிய தலைவலியாய் மாறுகிறது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படம் சூட்டிங் துவங்குவதற்கு முன்பே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் நிறைய பேர் இந்தப் படத்தில் நடிக்க விருப்பமில்லை என்று விலகி வருகின்றனர்.

Also read: ரஜினி பெயரை கெடுக்க வந்த வாரிசு.. தெரியாமல் மாட்டிக் கொண்ட சூப்பர் ஸ்டார்

குறிப்பாக இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் மற்றும் ஐஸ்வர்யாராயின் நண்பர் ஒருவர் இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி உள்ளார். மேலும் இவரின் இந்த மாதிரியான செயல்களை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால் விஷ்ணு விஷால் கூட இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது என்று கூறுகின்றனர்.

ஆனால் விக்ராந்த் மட்டும் ஏதோ இந்த படத்திற்காக ஒட்டிக் கொண்டிருக்கிறார்.
ஏனென்றால் அவருக்கு இப்பொழுது தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்காததால், கிடைத்த வாய்ப்பை எப்படியாவது தக்க வைத்துக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகள் பிடிக்கவில்லை என்றாலும் வேறு வழி இல்லாமல் இருக்கிறார். இதை அனைத்தும் ரஜினி பார்த்தும் பார்க்காத மாதிரி மகளுக்காக ரண வேதனையை அனுபவித்து வருகிறார்.

Also read: ஐஸ்வர்யாவுடன் ஒர்க் அவுட் செய்யும் நயன்தாராவின் எக்ஸ் காதலன்.. கொலவெறியில் தனுஷ்

- Advertisement -