இமய மலைக்கு நிம்மதியை தேடி சென்ற சூப்பர் ஸ்டார்.. காட்டுத் தீயாக வைரலாகும் புகைப்படம்

Rajinikanth: படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை பார்த்து ஒரு வசனம் சொல்வாங்க. வயசானாலும் உன் அழகை ஸ்டைலும் அப்படியே இருக்குது என்று. அந்த படம் எடுக்கும்போது ரஜினிக்கு தோராயமாக வயது ஒரு 40 கடந்திருக்கும் என்று வைத்துக் கொள்ளலாம்.

இப்போது எழுவதை கடந்த நிலையிலும் சூப்பர் ஸ்டார் அப்படியே அழகு மற்றும் ஸ்டைலுடன் இருக்கிறார். ரஜினியை தியேட்டரில் பெரிய ஸ்கிரீனில் பார்ப்பது தான் மாஸ். ஆனால் அதைத் தாண்டி அவர் எதிர்ச்சியாக எடுக்கும் ஒரு சில புகைப்படங்கள் கிளாஸ் ஆக அமைந்து விடும்.

அப்படி ஒரு புகைப்படம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி கொண்டு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் இமயமலைக்கு தன்னுடைய நண்பர்களுடன் புறப்பட்டார்.

வேட்டையன் படத்தில் நடித்த முடித்த கையோடு அபுதாபிக்கு ஒரு வாரம் ஓய்வு எடுப்பதற்காக சென்றிருந்தார். அதன் பின்னர் சென்னை வந்த சூப்பர் ஸ்டார் வழக்கம்போல இமயமலைக்கு அமைதிக்காக சென்று விட்டார்.

படம் ரிலீஸ் ஆகும் சமயத்தில் இமயமலை செல்வதை ரஜினி எப்போதுமே வழக்கமாகக் கொண்டிருந்தார். ரஜினி இமயமலைக்கு போகவில்லை. தொழில்நுட்பங்கள் நன்றாக வளர்ந்து விட்ட இப்போதைய காலகட்டத்தில் ரஜினி இமயமலையில் இருக்கும் நிறைய புகைப்படங்கள் கடந்த சில வருடங்களாகவே சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அதேபோன்று தற்போது இமயமலையில் இருக்கும் சூப்பர் ஸ்டாரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை கூலிங் கிளாஸ் என இமயமலை முன்பு நின்று மாஸாக போஸ் கொடுத்திருக்கிறார் ரஜினி.

காட்டுத் தீயாக வைரலாகும் புகைப்படம்

இந்த வயதில் நாம் இருந்தால் இமயமலை என்ன, ஒரு ரூமை விட்டு இன்னொரு ரூமுக்கு போக மற்றவரின் உதவி இல்லாமல் ஆவது நடக்க முடியுமா என்பது சந்தேகம்தான். ரஜினியின் சுறுசுறுப்பு எல்லோரையுமே ஆச்சரியப்படத்தான் வைக்கிறது.

அந்த சுறுசுறுப்பு மற்றும் ஆன்மீக எண்ணம் தான் அவரை இந்த வயதிலும் எந்த ஒரு குறையும் இல்லாமல் வைத்திருக்கிறது போல. ரஜினி இமயமலை சென்று வந்த பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

ரஜினி இமயமலையில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

Rajini at Himalayas
Rajini at Himalayas

Rajini at Himalayas
Rajini at Himalayas

Rajini at Himalayas
Rajini at Himalayas

சூப்பர் ஸ்டார் பட அப்டேட்டுகள்

- Advertisement -