மகள்களுக்காக மாடாய் உழைக்க ரெடியான சூப்பர் ஸ்டார்.. முடிவில்லாமல் போகும் வாரிசுகளின் அழிச்சாட்டியம்

Rajinikanth: ஒரு வகையில் பார்த்தால் சூப்பர் ஸ்டார் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி இரண்டு பேருமே ஒன்று. இதுதான் அவருக்கு கடைசி படம், இந்த ஐபிஎல் தான் அவருக்கு கடைசி ஐபிஎல் என எப்போதுமே ஒரு பேச்சு இருக்கும்.

ரஜினி சினிமாவில் இருந்து ஓய்வு பெற போகிறார், மகேந்திர சிங் தோனி ஐபிஎல் இல் இருந்து ஓய்வு பெற போகிறார் என அப்போ அப்போ கதை வந்து கொண்டே இருக்கும். ஆனா இவங்க ரெண்டு பேருமே அவங்களோட குறிக்கோளா எதை வச்சிருக்காங்கன்னு யாராலயுமே கண்டுபிடிக்க முடியாது.

ஒரு பக்கம் மகேந்திர சிங் தோனி இன்னொரு 10 வருஷத்துக்கு விளையாடி தான் ஆகணும்னு கிரிக்கெட் ரசிகர்கள் நினைக்கிறார்கள். அதே நேரத்தில் ரஜினியை ரொம்ப பிடித்த அவருடைய ரசிகர்கள் கூட போதும், அவர கஷ்டப்படுத்தாதீங்க என்று சொல்லும் அளவுக்கு நிலைமை இருக்கிறது.

ஜெயிலர் படம் தான் அவருடைய கடைசி படம் என பேசப்பட்டது. ஆனா அதுக்கு அப்புறம் தலைவர் ரெண்டு படத்துல புக் ஆயிட்டாரு. அதிலும் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து நடிக்கப் போகும் படம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

என்கிட்ட பணம் மற்றும் புகழ் எல்லாமே இருக்கு, நிம்மதி தான் இல்லை என மனம் திறந்து ரஜினியை ஒரு மேடையில் சொல்லிவிட்டார். அதற்கு காரணம் என்ன என்று எல்லோருக்கும் தெரியும். ரஜினியின் மகள்கள் எடுக்கும் முடிவால் தான் நிலை குறைந்து போய் இருக்கிறார்.

முடிவில்லாமல் போகும் வாரிசுகளின் அழிச்சாட்டியம்

இரண்டாவது மகளின் விவாகரத்து மற்றும் அடுத்த திருமணம் அவர் மீது நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை கொண்டு வந்தது. அதே நேரத்தில் மூத்த மகள் நன்றாக இருக்கிறாள் என்ற சந்தோஷம் கொஞ்ச நாள் கூட ரஜினிக்கு நீடிக்க வில்லை.

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹீரோவாக இருக்கும் தனுஷை வேண்டாம் என்று உதறி தள்ளிவிட்டு அப்பா வீட்டுக்கு வந்து விட்டார் ஐஸ்வர்யா. போதாத குறைக்கு இயக்குனர் ஆகிறேன் என்ற பெயரில் லால் சலாம் படத்தை எடுத்து தலைவருக்கு இன்னும் தலைவலியை ஏற்படுத்தி விட்டார்.

பொருளாதாரத்தில் நிலையாக இல்லாத மகள்களுக்காக சம்பாதித்தே ஆக வேண்டும் என்ற நிலைமையில் ரஜினிகாந்த் தள்ளப்பட்டு விட்டார். ரஜினி இப்போது படு சுறுசுறுப்பாக வேட்டையன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படப்பிடிப்பு முடிந்து கொஞ்ச நாள் கூட ரெஸ்ட் எடுக்கும் திட்டம் ரஜினிக்கு இல்லையாம். அடுத்து ஜூன் மாதமே தலைவர் 171 படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்துக்கான ஸ்கிரிப்ட் எல்லாத்தையும் ரெடி பண்ணி விட்டார். மகள்களுக்காக முன்பை விட படு வேகமாக ஓட ஆரம்பித்து விட்டார் சூப்பர் ஸ்டார்

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்