ரஜினிகாந்தை ஓரம்கட்ட கொண்டுவரப்பட்ட நடிகர்.. கடைசில அவர் நிலைமையை பாருங்க

சினிமாவில் பல நடிகர்கள் ஆரம்ப காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்துள்ளனர். ஆனால் ஒரே ஒரு நடிகர் மட்டும் வித்தியாசமான முறையில் பிரச்சினை சந்தித்துள்ளார். அது என்னவென்றால் தமிழ் சினிமாவில் இன்று வரைக்கும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ரஜினிகாந்த்.

இவரைப் போலவே அச்சு அசலாக அன்றைய காலத்தில் ஒரு நடிகர் இருந்துள்ளார். ரஜினி போல் இருப்பதால் முதலில் பாராட்டை பெற்ற இவர் அதன்பிறகு ரஜினியால் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். யார் அந்த நடிகர் என்ன பிரச்சினை என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் காதல் காதல் காதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நளினிகாந்த். அன்றைய காலத்தில் இவரும் ஒரு முக்கியமான நடிகர் என்று கூறலாம். ஏனென்றால் இவரும் பல படங்களில் நடித்துள்ளார்.

rajinikanth nalinikanth
rajinikanth nalinikanth

அப்போது நளினிகாந்தை ரஜினிகாந்தை வைத்து தான் ரசிகர்கள் ஒப்பிட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் ரஜினிகாந்த் செய்வது போலவே நளினிகாந்தும் செய்வது போல் இருப்பதாக பல ரசிகர்களும் கூறிவந்தனர்.

அதாவது நளினிகாந்த் கிட்டத்தட்ட ரஜினிகாந்த் போல் உருவ ஒற்றுமையை உடைய ஒரு நடிகர். ரஜினிகாந்த் போலவே மூக்கு, மூடிகொண்டவர் நளினிகாந்த். அன்றைய காலத்தில் பல தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் ரஜினிக்கு போட்டியாக நளினிகாந்த் கொண்டுவர திட்டமிட்டனர்.

பின்பு ரஜினிகாந்துடன் ஒப்பிடும்போது பிரபலம் ஆன நளினிகாந்த் பின்பு அதனாலேயே சினிமா வாழ்க்கையின் பல பிரச்சினைகளை சந்தித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் காதல் காதல் காதல் மற்றும் இதயம் பேசுகிறது போன்ற படங்களில் ஆரம்ப காலத்தில் ரஜினி போலவே நடை, உடை பாவனை செய்ததால் கொண்டாடிய ரசிகர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவரைக் கொண்டாட தவறினர்.

அதனாலேயே சினிமாவில் பெரிய அளவில் இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வந்தார். தற்போது வரை பல படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். கடைசியாக அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனிக்கு அப்பாவாக நடித்திருப்பார்.

Next Story

- Advertisement -