நீயெல்லாம் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்ட.. கண்ணழகியை உதறித்தள்ளிய KS ரவிக்குமார்

இயக்குனர் கே எஸ் ரவிகுமார் இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு ரிலீசான படையப்பா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், சௌந்தர்யா, செந்தில், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார். படையப்பா திரைப்படம் என்று சொன்னவுடனே பலருக்கும் நினைவில் வரும் ஒரே கதாபாத்திரம் என்றால், அது நீலாம்பரி கதாபாத்திரம் தான்.

அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரம் அதிக கர்வத்துடனும், கோபத்துடனும் தான் நினைத்ததை அடைவதற்காக எந்த அளவிற்கும் செல்லும் கதாபாத்திரமாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட இக்கதாபாத்திரத்திற்கு கணகச்சிதமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பொருந்தியிருப்பார்.

Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

ஆனால் இக்கதாபாத்திரத்திற்கு முதன் முதலில் நடிகை மீனாவை நடிக்க வைக்குமாறு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார். அந்த சமயத்தில் 1999 ஆம் ஆண்டு, மீனா,சிரஞ்சீவி நடிப்பில் உருவான ஸ்ரேயம் கோசம் என்ற தெலுங்கு திரைப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி இருந்தார். இத்திரைப்படம் தமிழில், சிம்ரன் சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான நட்புக்காக திரைப்படத்தின் ரீமேக்காகும்.

இத்திரைப்படத்தில் நடிகை மீனா வில்லியாக நடிக்கும் காட்சிகள் எல்லாவற்றிலும் அவரது கண்களில் குழந்தைத்தனமான நடிப்பு வெளிப்பட்டதாம். இதனை பார்த்த கேஎஸ் ரவிக்குமார் உடனே ரஜினிகாந்திடம் சென்று, மீனா இத்திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு செட்டாக மாட்டார் என கூறிவிட்டாராம்.

Also read: சன் பிக்சர்ஸ்கே கட்டளை போட்ட ரஜினிகாந்த்.. இதெல்லாம் வேற எங்கேயாவது வச்சுக்கோங்க

அதன் பின்புதான் நடிகை ரம்யா கிருஷ்ணன் இத்திரைப்படத்தில் நீலாம்பரி கதாபாத்திரத்திற்கு கமிட்டானார்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தின் கதையை கேட்கும் போதெல்லாம் நீலாம்பரி கதாபாத்திரத்திற்காக காட்சிகளை அதிக அளவில் மெருகேற்றுமாறு கூறுவாராம்

அதில் முக்கியமாக நடிகை சௌந்தர்யாவின் கன்னத்தில் ரம்யா கிருஷ்ணன் தனது காலை வைத்து திருப்பும் காட்சிகளெல்லாம் ரஜனிகாந்த் வைத்த காட்சிகள் என கேஎஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார். அந்த காட்சியை ரம்யா கிருஷ்ணன் கர்வத்துடன் மிரட்டியிருப்பர். இன்று வரை படையப்பாவாக நடித்த ரஜினிகாந்தை விட நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணனையே அதிகம் பேசப்பட்ட கதாபாத்திரம்.

Also read: நெல்சனுக்கு கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்.. விழி பிதுங்கி நிற்கும் ரஜினிகாந்த்!

Next Story

- Advertisement -