இவர் தேறவே மாட்டார் என ரஜினி நினைத்த நடிகர்.. 4 படங்களில் தலைவரை மிரட்டிய நடிப்பு சூறாவளி

Super Star Rajinikanth: பொதுவாக நடிகர்கள் ஏதாவது ஒரு விழாவிற்கு செல்லும் பொழுது சக நடிகர்களை ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி பேசுவது வழக்கம். ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர். தனக்கு என்ன தோன்றுகிறதோ அதை ரொம்பவும் வெளிப்படையாகவும் அதே நேரத்தில் மற்றவர்கள் மனதும் புண்படாத அளவுக்கு நகைச்சுவை கலந்து பேசி விடுவார்.

அப்படி ஒரு நடிகரின் படத்தைப் பார்த்துவிட்டு இவர் எல்லாம் எப்படி ஹீரோ ஆக முடியும், இவர் தேறவே மாட்டார் என நினைத்துக் கொண்டாராம் ரஜினி. இதை அந்த நடிகர் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையில் அவர் முன்னிலையில் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார். அதே மேடையில் என்னுடைய கணிப்பு தவறாகி விட்டது என அந்த நடிகரை பாராட்டியும் இருக்கிறார்.

Also Read:காகம் பருந்தாக முடியாது.. ரஜினி சொன்ன குட்டி கதை, வெடித்த அடுத்த சர்ச்சை

ரஜினி அப்படி இந்த நடிகர் தேறவே மாட்டார் என நினைத்தவர் தான் நடிகர் சூர்யா. அவர் அறிமுகமான நேருக்கு நேர் திரைப்படத்தை பார்த்துவிட்டு. இவருக்கு நடிக்கவே தெரியவில்லை இவரை ஏன் ஹீரோவாக தேர்ந்தெடுத்தார்கள் என்று ரஜினி நினைத்தாராம். இது காப்பான் இசை வெளியீட்டு விழாவின் போது சூர்யா முன்னிலையிலேயே ரஜினி சொன்ன விஷயம்.

சூர்யாவை பற்றி அப்படி நினைத்த ரஜினி அவரின் நந்தா, பிதாமகன்,காக்க காக்க மற்றும் கஜினி படங்களை பார்த்துவிட்டு ரொம்பவே மிரண்டு போய்விட்டாராம். சூர்யாவை பற்றி அப்போது அப்படி கணித்தது தவறு என நினைத்துக் கொண்டாராம். ரஜினி நினைத்திருந்தால் சூர்யாவை பற்றி பாராட்டி பேசி இருக்கலாம். ஆனால் அவர் இது போன்ற சொன்னது சினிமாவில் சூர்யா நடிப்பின் மூலம் அசுர வளர்ச்சி அடைந்ததை சொல்ல வேண்டும் என்பதால் தான்.

Also Read:அன்று நெல்சனை அவமானப்படுத்திய மீடியா.. இன்று இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ரஜினி, காரணம் இதுதான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமில்லை நேருக்கு நேர் திரைப்படம் ரிலீசான போது யாருக்குமே நடிகர் சூர்யா இந்த அளவுக்கு வருவார் என்பதில் நம்பிக்கை இல்லை. அதிலும் இயக்குனர் வசந்த், சூர்யா இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சிவகுமாரிடம் கேட்ட பொழுது, வேண்டவே வேண்டாம், சூர்யாவுக்கு சேர்ந்தால் போல் பத்து வார்த்தை கூட பேச தெரியாது என்று சொல்லி மறுத்த சம்பவமும் உண்டு.

எதிர்பாராத விதமாக சினிமாவிற்குள் நுழைந்த சூர்யா அதன்பின்னர் தன்னைத்தானே செதுக்கி கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். நடிப்பில் அவர் காட்டிய பரிமாணம் என்பது அவருடைய கடின உழைப்பிற்கு கிடைத்த பரிசாக பார்க்கப்படுகிறது. அவருடைய சமீபத்திய ரிலீஸ் ஆன ஜெய் பீம், சூரரைப் போற்று போன்ற படங்கள்தான் இதற்கு உதாரணம்.

Also Read:மாலத்தீவுக்கு போயிட்டு வந்தபின் ரஜினிக்கு கிடைத்த மன நிம்மதி.. நெல்சனை கட்டி தழுவ இதுதான் முக்கிய காரணம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்