80களில் நெகட்டிவ் ரோலில் ரஜினி பின்னிய 5 படங்கள்.. கமலை மட்டுமே தூக்கி வைத்த பாலச்சந்தர்

Rajinikanth Negative Role Movies: தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இல்லாமல் தன்னுடைய உழைப்பால் படிப்படியாக முன்னேறியவர் தான் ரஜினி. இவரை தமிழக ரசிகர்கள் இந்த அளவிற்கு தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதற்கு காரணம், அவருக்கே உரித்தான ஸ்டைல்தான். இருப்பினும் அவர் சினிமாவில் நுழையும் போது ஹீரோவாக வாய்ப்பு கொடுக்காமல் கமலுக்கு வில்லனாக நடிக்க வைத்தனர். அதுவும் ரஜினியை சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய பாலச்சந்தரே இந்த வேலையை பார்த்திருக்கிறார். ஆரம்பத்தில் ரஜினிக்கு நெகட்டிவ் ரோல் மட்டுமே நிறைய படங்களில் செட் ஆனது. அந்த படங்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதனால் பாலச்சந்தர் கமலுக்கு மட்டுமே நிறைய மாஸ் கதாபாத்திரங்கள் கொடுத்து தூக்கி விட்டார்.

அபூர்வ ராகங்கள்: பெங்களூரில் சாதாரண பஸ் கண்டக்டராக இருந்த ரஜினியின் ஸ்டைலை பார்த்து பாலச்சந்தர் அவரை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய படம் தான் அபூர்வ ராகங்கள். இந்த படத்தில் கமல் ஹீரோவாகவும் ரஜினி வில்லனாகவும் முதன்முதலாக இணைந்து நடித்தனர். இந்தப் படத்தில் சூப்பர் ஸ்டார் உலக நாயகனுக்கு கொடூரமான வில்லனாக நடித்தார். என்னதான் ரஜினியை பாலச்சந்தர் கோலிவுட்டிற்கு அறிமுகப்படுத்தினாலும் அவரை ஒரு ஹீரோவாக காட்டாமல் எடுத்ததுமே வில்லனாக காட்டி ஓர வஞ்சகம் செய்துவிட்டார் என இப்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எண்ணுகின்றனர்.

Also Read: ரஜினியை மிரள வைத்த காமெடி நடிகர்.. இவரைப் போய் மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படும் சூப்பர் ஸ்டார்

மூன்று முடிச்சு: 1976 ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி ஜோடியாக நடித்த இந்தப் படத்திலும் ரஜினியை மறுபடியும் வில்லனாக காட்டினர். அதிலும் பிரசாந்தாக ரஜினி இந்த படத்தில் படுமோசமான வில்லனாக இருந்தார். அதுவும் அவருக்குள் இருந்த மிருகத்தனத்தை சொந்த தந்தையை ஏற்றுக் கொள்ள முடியாமல் செத்து விட சொல்கிறார். கடைசியில் அவருக்குள் இருக்கும் மிருகத்தனம் அவரை விட்டுப் போனதுடன், தொட்டு ஏமாற்றிய பெண்ணையும் திருமணம் செய்து கொண்டு கடைசியில் ஹீரோவாகி விடுவார். இருப்பினும் அந்த படம் முழுக்க அவரை ஒரு கொடூரமான வில்லனாகவே காட்டிவிட்டு கமலை மட்டும் பக்கா ஜென்டில்மேன் ஆக பாலச்சந்தர் காட்டினார்.

அவர்கள்: கே பாலச்சந்தர் இயக்கத்தில் வித்யாசமான முக்கோண காதல் கதையைக் கொண்ட படம் தான் அவர்கள். சுஜாதா காதலனை பிரிந்து வீட்டில் பார்த்த மாப்பிள்ளையான ரஜினியை திருமணம் செய்து கொள்கிறார். ஆனால் சுஜாதாவின் காதலை அறிந்த பிறகு ரஜினி அவரை அணு அணுவாக சித்திரவதை படுத்துகிறார். கொடுமை தாங்கமுடியாமல் ஒரு கட்டத்தில் அவர் விவாகரத்தும் வாங்கி விடுகிறார். பிறகு சுஜாதா தன் காதலித்தவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கும் போது, ரஜினி அவரை நிம்மதியாக வாழ விடாமல் ஏகப்பட்ட சதி திட்டங்களை தீட்டி, பிரிந்து சென்ற பின்பும் கொடுமைப்படுத்துகிறார். ஆனால் இந்த படத்தில் கமல் சுஜாதாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் நபராக அவரை ஒரு தலையாக காதலிக்கிறார். இப்படி இந்த படத்தில் ரஜினியை சந்தேகப் பேய் பிடித்து ஆடக்கூடிய கொடூரமான வில்லனாக பாலச்சந்தர் காட்டிவிட்டு கமலை மட்டும் கண்ணியமான காதலனாக காட்டி தூக்கி நிறுத்தினார்.

Also Read: தரித்திரம் புடிச்சவன் என ஒதுக்கப்பட்ட இயக்குனர்.. கடைசியில் பாரதிராஜா கடனை தீர்த்ததே அவர்தான்

16 வயதினிலே: இந்தப் படத்தில் பரட்டையாக வில்லன் கேரக்டரில் படுமோசமான பொறுக்கியாக ரஜினி நடித்தாலும், இந்தப் படம் தான்
அவருடைய சினிமா கேரியரிலே மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதில் சப்பானியாக பாவப்பட்ட ஜென்மம் போல் அப்பாவியாக இருக்கும் கமலை ரஜினி படுத்தும் பாடு படத்தை பார்ப்போருக்கே சூப்பர் ஸ்டாரின் மீது கோபம் வரும் அளவுக்கு இருக்கும். ஆனால் இந்த படத்தை பாலச்சந்தர் எடுக்கவில்லை, பாரதிராஜா எடுத்து சூப்பர் ஸ்டாரின் திறமையான நடிப்பை வெளிக்கொணர்ந்து, ரஜினியின் சினிமா வாழ்க்கைக்கு தூண்டுகோலாக இருந்தார்.

ஆடு புலி ஆட்டம்: ரஜினியை வில்லனாகவும் கமலை ஹீரோவாகவும் காட்டிய மற்றொரு படம் தான் ஆடு புலி ஆட்டம். இந்த படத்தை எஸ்.பி. முத்துராமன் இயக்கினார். இதில் போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் கமல் ரஜினியுடன் சேர்ந்து கெட்ட சவகாசத்தில் விழுந்து விடுகிறார். கடைசியில் தன்னுடைய கூட்டாளிகளை போலீசில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டு கமல் போலீசாகவும் மாறிவிடுகிறார். ஆனால் இந்த படத்தில் கடைசியில் ரஜினியை பொறுக்கியாகவும் கமலை மட்டும் உண்மையான போலீஸ் ஆகவும் காட்டி படத்தை முடித்தது, உலக நாயகனின் சினிமா கேரியரை தூக்கி நிறுத்துவதற்கா? என்ற கேள்வி இப்போது சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

Also Read: ஆண்டவர் கமல் இடத்தைப் பிடிக்க தகுதியான 5 நடிகர்கள்.. ஐந்தே நிமிடத்தில் ஸ்கோர் செய்த ரோலக்ஸ்

Next Story

- Advertisement -