முக்கிய கட்சியில் இணைந்த ரஜினி வில்லனின் மனைவி.. சூடு பிடிக்கும் தேர்தல் களம்

அடுத்தடுத்து வெளிவர இருக்கும் படங்களின் தயாரிப்பில் பிசியாக இருந்து வருகிறார் ரஜினி. அண்மையில் லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜெய் பீம் இயக்குனரான ஞானவேல் இயக்கத்தில் இவர் நடிக்க இருக்கும் செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் ஜெயிலர் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அப்படத்தில் ரஜினிக்கு முக்கிய வில்லனாக நடித்து வருபவர் தான் கன்னட நடிகர் ஆன சிவராஜ்குமார். மேலும் இப்படத்தில் திமிரு பட நடிகரான விநாயகம் மற்றும் பாலிவுட் வில்லனான ஜாக்கி ஷெராப் ஆகியோர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

Also Read:படவாய்ப்பு இல்லாமல் வீட்டிலேயே முடங்கிய கார்த்திக்.. ரஜினி படத்தால் யாரும் எதிர்பார்க்காமல் கிடைத்த வாய்ப்பு

இருப்பினும் சிவராஜ் குமார் இப்படத்தில் ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிப்பதால் கன்னட மற்றும் தமிழ் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை முன் வைக்கின்றது. இந்த நிலையில் இவரின் மனைவியான கீதா தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார்.

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே மாதத்தில் நடைபெற இருக்கும் நிலையில் முன்னணி தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னாள் முதலமைச்சர் ஆன பங்காரப்பாவின் மகனான மதுபங்காரப்பா காங்கிரஸில் இருப்பதால் தற்பொழுது கீதா அவர்களும் அதே கட்சியில் இணைந்திருக்கிறார்.

Also Read:ரசிகர்களால் பிரச்சினையில் சிக்கிய கிச்சா சுதீப்.. வழக்கு பதிவு செய்த போலீசார்

இதற்கு முன்பாகவே கன்னட நடிகரான சுதீப் பிஜேபிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இது பெரும் ஆச்சரியத்தை கிளப்பிய நிலையில் எதிர்க்கட்சி ஆதரவாளரான சுதீப்பை எதிர்த்து தன் மனைவியை களம் இறக்கியுள்ளார் சிவராஜ். ஏற்கனவே இவரின் தந்தை ராஜ்குமார் அரசியலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து தற்பொழுது தன் மனைவி அரசியலில் இடம்பெற அவருக்கு உறுதுணையாக சிவராஜ்குமார் இருந்து வருகிறார். ஒருபுறம் ஜெயிலர் சூட்டிங்கில் பிஸியாக இருக்கும் இவர் தற்பொழுது தன் மனைவியின் அரசியல் பயணத்திற்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார். விரைவில் இவரும் கட்சியில் இணைந்தாலும் இணையலாம்.

Also Read:இந்த வருடம் வைரலான 3 ஹீரோக்களின் போட்டோஸ்.. ரஜினி, அஜித்தை ஓரம் கட்டிய விஜய்

Next Story

- Advertisement -