மணிரத்னம் அழைத்தும் தயக்கம் காட்டும் ரஜினி.. சூப்பர் ஸ்டார் மனதில் இருக்கும் ரகசியம்

தஞ்சை கோவிலுக்கு செல்ல ரஜினிகாந்த் தயக்கம் காட்டி வருகிறார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், பிரம்மாண்டமான பொருட்செலவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகி உள்ளது.

நடிகர்கள் விக்ரம், சரத்குமார், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நடிகைகள் ஐஸ்வர்யா, திரிஷா, சோபித்தா உள்ளிட்டோர் நடித்துள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியை தஞ்சாவூரில் அமைந்துள்ள உலகப்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் நடத்த மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்.

மேலும் அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திரைப்பட நடிகர், நடிகைகள் பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சிக்கு வருவதற்காக அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மணிரத்னம் அழைப்பு விடுத்த நிலையில், ரஜினிகாந்த் வருவதற்கு தயக்கம் காட்டியுள்ளார்.

ஏனென்றால் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜ ராஜ சோழன் பேரரசருக்கு சாபம் விடுக்கப்பட்டதால், இக்கோவிலின் முன்பக்கம் வரும் பிரபலங்களின் வாழ்க்கை சரிந்துவிடும் என்பதாக பல காலங்களாக கூறப்பட்டுவருகிறது. இதனிடையே இக்கோவிலின் பின்பக்கம் வழியாகவே பல பிரபலங்கள் வந்து செல்வது வழக்கம்.

சில வருடங்களுக்கு முன்பு, மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, ஒருமுறை தஞ்சை கோவிலின் பின்பக்க வாசல் வழியாகவே சென்றார். இதனையறிந்த ரஜினி, பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச் நிகழ்ச்சி அங்கு நடைபெறப்போவதால், அக்கோவிலுக்கு செல்ல தயக்கம் காட்டி வருகிறாராம்.

அப்படியே அங்கு ரஜினிகாந்த் சென்றாலும், பின் வாசல் வழியாகவே கோவிலுக்குள் செல்வார் என்றும் கூறப்படுகிறது. மேலும் சிவன் பக்தரான ரஜினிகாந்த் தஞ்சையில் உள்ள சிவனை பார்க்க ஏன் தயக்கம் காட்ட வேண்டும் என்ற கேள்விக்கு தற்போது விடை கிடைத்துள்ளது.

Next Story

- Advertisement -