மயில் நடிகை மீது ரஜினிக்கு இருந்த காதல்.. சென்டிமென்ட் பார்த்து தவறவிட்ட சூப்பர் ஸ்டார்

இப்பொழுது சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு படங்களுக்கும் வேறு வேறு ஹீரோயின்கள் கமிட்டாகி நடித்து வருகின்றனர். ஆனால் முன்பெல்லாம் ரஜினி ஒரே ஹீரோயினுடன் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அப்படி தன்னுடன் இணைந்து நடித்த ஒரு நடிகையின் மேல் இவருக்கு அளவு கடந்த காதலும் ஏற்பட்டிருக்கிறது.

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது ரஜினியோடு பல திரைப்படங்களில் ஜோடி போட்டு நடித்த ஸ்ரீதேவி தான். தமிழ் ரசிகர்களால் மயிலு என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் ரஜினி, கமல் இருவரோடும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் இவர் இரண்டு நடிகர்களுக்குமே சரியான ஜோடியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also read: மீனாவுக்கு சுட்டு போட்டாலும் இது வராது.. ரகசியத்தை உடைத்த பிரபல இயக்குனர்

அதனாலேயே ரஜினிக்கு இவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. அது மட்டுமல்லாமல் இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் ஆசைப்பட்டிருக்கிறார். அந்த சமயத்தில் தான் ஸ்ரீதேவியின் வீட்டு கிரகப்பிரவேசம் நடைபெற்று இருக்கிறது. அதில் ரஜினி உட்பட பல நடிகர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.

அப்போதுதான் அவர் ஸ்ரீதேவியின் அம்மாவிடம் தன் திருமண ஆசையை கூறி பெண் கேட்க முடிவெடுத்து இருக்கிறார். அப்படி ஒரு எண்ணத்தோடு தான் அவர் ஸ்ரீதேவி வீட்டிற்கும் சென்றிருக்கிறார். ஆனால் அவர் வீட்டிற்குள் நுழைந்த நேரம் பார்த்து கரண்ட் கட் ஆகி இருக்கிறது.

Also read: ரஜினிக்கு தங்கச்சியாகவும், காதலியாகவும் நடித்த 5 நடிகைகள்.. நெற்றிக்கண் சக்ரவர்த்தியை தெறிக்கவிட்ட சரிதா

இது ரஜினிக்கு மிகப் பெரும் சகுன தடையாக இருந்திருக்கிறது. அதை ஒரு சென்டிமென்ட்டாக எடுத்துக்கொண்ட அவர் கடைசி வரை தன்னுடைய விருப்பத்தை கூறாமலேயே அங்கிருந்து கிளம்பி இருக்கிறார். ஒருவேளை அன்று கரண்ட் மட்டும் போகாமல் இருந்திருந்தால் நிச்சயம் ரஜினி தன் மனதில் இருக்கும் விஷயத்தை தெரிவித்து இருப்பார்.

அதற்கு ஸ்ரீதேவியின் அம்மா சம்மதித்திருந்தால் இது திருமணம் வரை கூட சென்றிருக்கக்கூடும். ஆனால் சூப்பர் ஸ்டார் சென்டிமென்ட் பார்த்து தன் காதலை தவற விட்டிருக்கிறார். இந்த விஷயம் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கிறது. மேலும் ரஜினியும் தனக்கு பிடித்த ஹீரோயின் ஸ்ரீதேவி தான் என்று பல மேடைகளில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் மனதில் இருந்த காதலும் தெளிவாக தெரிகிறது.

Also read: எந்திரன் படத்தில் ரஜினிக்கு டூப் போட்டது இந்த இயக்குனரின் மகனா! பல வருடம் கழித்து வெளிவந்த உண்மை

Next Story

- Advertisement -