விஜய் எனக்கு போட்டியா!.. தன்னுடைய ஸ்டைலில் ரசிகர்களுக்கு பதில் சொன்ன ரஜினி

Lal Salaam Audio Launch: ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள்.ஆனால் சமீபத்தி கோலிவுட் வட்டார நிலவரப்படி கூத்தாடிகளை ரெண்டாக்கி குளிர் காய்ந்து வருகிறார்கள். இதில் இப்போது வசமாக சிக்கி இருப்பது ரஜினி மற்றும் விஜய் தான். ரஜினி சினிமாவில் ஆக்டிவாக இருக்கும் நேரத்திலேயே விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பி விட்டு விட்டார்கள்.

விஜய் மற்றும் ரஜினி பேசும் சின்ன சின்ன விஷயங்களை கூட ரொம்ப பெருசாக்கி அதை சர்ச்சையாக மாற்றி விடுகிறார்கள். இதனால் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கிடையே சமூக வலைத்தளத்தில் மிகப்பெரிய போர்க்களமே வெடித்து வருகிறது. இந்த பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா மேடையை சரியாக பயன்படுத்தி பதிலடி கொடுத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

ரசிகர்களுக்கு பதில் சொன்ன ரஜினி

ஜெயிலர் பட இசை வெளியீட்டு விழாவின் போது ரஜினி சொன்ன காக்கா கழுகு கதை சமூக வலைத்தளத்தில் பயங்கர வைரல் ஆகியது. அதை பற்றி பேசிய ரஜினி நான் சொன்ன காக்கா கழுகு கதையை ஒரு சிலர் தவறாக புரிந்து கொண்டார்கள். அது விஜய் மீது நான் வைத்த விமர்சனம் என சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தியை பார்த்தது. ரொம்பவும் வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தது.

Also Read:எங்க அப்பா சங்கியா!. லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அதிரடி பேச்சு

விஜய் நான் பார்த்து வளர்ந்த பையன். நான் தர்மத்தின் தலைவன் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போது அவருடைய அப்பா எஸ் ஏ சி வந்து என்னுடைய மகன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறான், படித்து முடித்துவிட்டு நடிக்கலாம் என்று அவனிடம் சொல்லுங்கள் என அவர் என்னிடமே சொல்லி இருக்கிறார். விஜய் ரொம்பவும் கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

விஜய்க்கு நான் போட்டி இல்லை, எனக்கு நானே போட்டி. அதே போன்று தான் நான்தான் எனக்கு போட்டி என விஜய் பல மேடைகளில் சொல்லி இருக்கிறார். என்னுடைய படம் எனக்கு போட்டி, அதே போன்று விஜய் உடைய படம் அவருக்கு போட்டி. விஜய் எனக்கு போட்டி என நான் நினைப்பதும், நான் விஜய்க்கு போட்டி என அவர் நினைப்பதும் இருவருக்குமே கௌரவம் ஆகாது.

விஜய் விரைவில் அரசியலுக்கு வர இருக்கிறார், சமூக சேவைகள் செய்ய இருக்கிறார். நான் எப்போதுமே அவரின் நலம் விரும்பியாக தான் இருப்பேன் என சர்ச்சைகளுக்கு முடிவு கட்டி இருக்கிறார் ரஜினி. விஜய்யை பற்றி மட்டும் இல்லாமல் ரஜினி இளையராஜாவின் மகள் பவதாரணிக்கு தன்னுடைய இரங்கலை அந்த மேடையில் தெரிவித்திருந்தார். அதேபோன்று கேப்டன் விஜயகாந்த் மறைவு, கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் அவர் நடித்தது பற்றியும் பகிர்ந்திருந்தார்.

Also Read:வேட்டையனுக்குப் பின் ரஜினி வைக்கும் பொறி.. கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்