ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

5 வருடத்திற்கு முன்பே சமாளித்த ரஜினியிடம் தோத்துப்போன விஜய்.. என்னைக்கும் கழுகு கழுகு தான்

Rajini Vs Vijay: தற்சமயம் கோலிவுட்டில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதம் முற்றிப் போனது. இதனால் ரஜினி- விஜய் இருவரும் மறைமுகமாக மோதிக் கொள்கின்றனர். அதிலும் ஜெயிலர் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் சொன்ன கழுகு- காகம் கதைக்கு, லியோ ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் விஜய் தன்னுடைய ஸ்டைலில் குட்டி ஸ்டோரி உடன் பதிலடி கொடுப்பார் என தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர்.

ஆனால் அவர்களின் தலையில் இடி விழுந்த மாதிரி, லியோ ஆடியோ லான்ச் ரத்து செய்யப்படுவதாக தற்போது தயாரிப்பு நிறுவனம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ரஜினி மீண்டும் தன்னை சூப்பர் ஸ்டார் என நிரூபித்து விட்டார்.

Also Read: லியோ ஆடியோ லாஞ்சும் இல்ல ஒரு மண்ணும் இல்ல.. வெறுத்துப் போய் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட பட குழு

ஏனென்றால் 2018ம் ஆண்டு காலா இசை வெளியீட்டு விழா நடைபெற்ற போது, ரஜினியின் அரசியல் வருகைக்கு நாலா பக்கமும் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது. ஆனால் அவர் எதைப் பற்றியும் துளி கூட பொருட்படுத்தாமல் மனுஷன் கெத்தா அனல் தெறிக்க பேசி தன்னுடைய ரசிகர்களை ஆரவாரப்படுத்தினார்.

இதான்டா ரஜினி! என்னைக்கும் கழுகு கழுகு தான் என்று 5 வருடத்திற்கு முன்பே சூப்பர் ஸ்டார் மாஸ் காட்டிவிட்டார். ஆனால் இப்போது விஜய்யின் அரசியல் பிரவேசம் தீவிரமடைந்ததால், அந்த பிரஷரை சமாளிக்க முடியாமல் லியோ படத்தின் ஆடியோ லாஞ்சை ரத்து செய்துவிட்டார்.

Also Read: விஜய்யின் அரசியல் அஸ்திவாரத்தை ஆட்டம் காண வைத்தாரா உதயநிதி.? தளபதி தரப்பில் கூறும் 5 காரணங்கள்

இதைக் கூட சமாளிக்க முடியவில்லை என்றால், எப்படி தமிழகத்தை ஆள முடியும் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் விஜய்யை சோசியல் மீடியாவில் கிழித்து தொங்க விடுகின்றனர். அதுமட்டுமல்ல ரஜினிக்கு இருந்த தைரியத்தில் 1% கூட விஜய்க்கு இல்லை என்றும் காட்டமாக விமர்சிக்கின்றனர். ரஜினி முன்பு விஜய் தோத்துப்போய்விட்டார்.

ஒரு சாதாரண இசை வெளியீட்டு விழாவிற்கு வர முடியாமல் பின்வாங்கும் விஜய், லியோ படத்தின் ரிலீஸ் தேதியையும் தள்ளி போட வாய்ப்பு இருக்கிறது. கடைசி வரை ரஜினி சொல்ல கழுகு- காகம் கதைக்கு ரிவிட் அடிக்க முடியாமல் போய்விடுமோ என்று தற்போது
தளபதி ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

Also Read: விஜய்யை வைத்து ஒரு கிராமத்தையே படிக்க வைத்த புண்ணியவான்.. ஆச்சரியப்பட்டு புல்லரித்து போன தளபதி

- Advertisement -

Trending News