குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்.. தலைவர் அலப்பறை செய்யும் ஜெயிலர் பட வீடியோ

Jailer Movie: நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஹுக்கும் தலைப்பில் வெளியான லிரிக்கல் வீடியோவில் ரஜினி கொல மாஸாக இருக்கிறார்.

ஏற்கனவே ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரசிகர்களை எரிச்சலடைய வைத்தது. ஏனென்றால் இந்தப் பாடல் ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மாஸ் லுக்கில் இல்லாமல் தமன்னாவின் ஐட்டம் பாடலாகவே இருந்தது. இதில் ரஜினி கொஞ்சம் கூட ஒட்டாமல் தமன்னாவுடன் ஒரு சில ஸ்டெப்ஸ்களை மட்டும் போட்டு இருந்தார்.

Also Read: லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்..தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீசாக இருக்கும் ஜெயிலர் படத்தின் முதல் சிங்களை பார்த்துவிட்டு கலக்கத்தில் இருந்தவர்களுக்கு தற்போது 2வது பாடலான ஹுக்கும் வெளியாகி குஷிப்படுத்தியுள்ளது. இதில் ரஜினி கர்ஜுனையுடன், ‘இது டைகர் கட்டளை’ என சொல்வதும் ‘குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்’ என ஒவ்வொரு வரிகளும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் செம மாஸாக இருக்கிறது.

இந்தப் பாடலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஆர்ப்பரித்துக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே இந்த பாடல் வெளியாகுவதாக போஸ்டர் வெளியானதை தொடர்ந்து இன்று மாலை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ஹுக்கும் பாடலுக்காக வழி மேல் விழி வைத்து காத்திருந்தனர்.

Also Read: கொடூர வில்லனாக இருந்து நகைச்சுவை நடிகர்களாக மாறிய 5 பிரபலங்கள்.. பாட்ஷாவுக்கு தண்ணி காட்டிய இந்திரனா இது.!

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக சில நிமிடங்களுக்கு முன்பு இந்த பாடலை பட குழு சமூக வலைதளங்களில் வெளியிட்டு ட்ரெண்டாக்கி உள்ளனர். இந்த பாடல் முழுவதும் ரஜினி கெத்தா அவருக்கே உரித்தான ஸ்டைலில் அலப்பறை செய்திருக்கிறார். பேக்ரவுண்டில் சிறைச் சிறைச்சாலையில் துப்பாக்கி, கத்தியுடன் தலைவர் பூந்து விளையாடுகிறார்.

ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் இதோ!

Also Read: ரஜினியை ஏமாற்றிய தயாரிப்பாளர்.. லட்சத்தில் சம்பளம் வாங்கிய முதல் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்