பயங்கர உற்சாகத்தில் இருக்கும் ரஜினி.. சந்தோஷத்தில் கொடுக்கப் போகும் அடுத்தடுத்த அறிவிப்பு

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை தான் அவருடைய ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த ரஜினி தற்போது பயங்கர உற்சாகத்தில் இருக்கிறாராம்.

இதற்கு காரணம் அவருடைய மகள் ஐஸ்வர்யாவும், மாப்பிள்ளை தனுஷும் தான். கடந்த ஜனவரி மாதம் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்ய போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ந்து போனது. ரஜினி உட்பட வீட்டில் உள்ளவர்கள் யார் சொல்லியும் இவர்கள் இருவரும் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

Also read : ஜெயிலர் படத்தில் இருக்கும் 2 முக்கிய கேரக்டர்கள்.. ரஜினிக்கு இணையாக இருக்கும் பவர்ஃபுல் கதாபாத்திரங்கள்

இதனால் இரு தரப்பிலும் அவர்களை சமாதானப்படுத்தி சேர்த்து வைப்பதற்கு ஏராளமான முயற்சிகள் நடைபெற்றது. ஆனாலும் அதை கண்டு கொள்ளாத இவர்கள் இருவரும் தங்கள் வழிகளில் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த உறுதியெல்லாம் தற்போது தகர்ந்து போய் உள்ளது.

தங்கள் பிள்ளைகளின் நலனுக்காக தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளனர். இந்த விஷயம் தான் சூப்பர் ஸ்டாரை குழந்தை போல துள்ளி குதிக்க வைத்துள்ளது. இதன் காரணமாக அவர் அடுத்தடுத்து பல முடிவுகளை எடுத்துள்ளாராம்.

Also read : தனுஷ், ஐஸ்வர்யா ரஜினி வீட்டில் நடந்த திடீர் சந்திப்பு.. விவாகரத்து முடிவுக்கு முற்றுப்புள்ளியா?

அதாவது சூப்பர் ஸ்டார் தனக்கு இருந்த குடும்ப பிரச்சனையால் தலைவர் 170 படத்தோடு சினிமாவை விட்டு விலக முடிவு எடுத்திருந்தார். இதனாலேயே அந்தப் படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் இப்போது சூப்பர் ஸ்டார் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டாராம். தன்னுடைய மகள் வாழ்வில் இருந்த பிரச்சனை முற்றிலுமாக விலகியதை அடுத்து அவர் இன்னும் இரண்டு படங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த செய்தி தற்போது ரஜினி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

Also read : பொன்னியின் செல்வனை கண்டுக்காத கமல், ரஜினி.. சைலன்டாக ஆட்டி வைக்கும் பெரிய இடம்

- Advertisement -spot_img

Trending News