வேட்டையாடு விளையாடை விட பல மடங்கு ஜெயிலரில் மெனக்கிட்ருக்கேன்.. சஸ்பென்சை உடைத்த மாஸ்டர்

Jailer Movie Update: 17 வருடம் கழித்து கமலின் சூப்பர் ஹிட் படமான வேட்டையாடு விளையாடு படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து, ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்தவர் தான் தற்போது ஜெயிலர் படத்திலும் ரஜினிக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணி புரிந்துள்ளார்.

பீஸ்ட் படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தை நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. மேலும் இந்த படம் சிறைச்சாலை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதால் படத்தில் இடம்பெறும் ரஜினியின் போர்ஷன் முழுவதுமாக நிறைவடைந்துள்ளது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கான சூட்டிங் மட்டுமே மீதம் இருப்பதால் அவற்றை விரைவில் முடித்துவிட்டு புரமோஷன் வேலைகளையும் துவங்கப் போகின்றனர்.

Also Read: பிரபாஸ் உடன் 600 கோடி பட்ஜெட்டில் இணையும் கமல்.. இவ்வளவு கம்மி சம்பளமா என ஷாக் ஆன திரையுலகம்

இந்நிலையில் படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் வேற லெவெலில் வந்திருப்பதாக ஸ்டண்ட் சிவா உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார். இவர் அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், ஜெயிலர் படத்தை குறித்த பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதிலும் வேட்டையாடு விளையாடு படத்தை விட பல மடங்கு ஜெயிலர் படத்திற்கு மெனக்கெட்டு இருப்பதாக சொல்லி இருப்பது சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே 72 வயதை தொட்டிருக்கும் ரஜினி இப்போதும் ஹீரோவாக நடித்து மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார். இவருடைய படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளுக்கு ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருப்பதால், ஒவ்வொரு விஷயத்தையும் ஸ்டண்ட் சிவா பார்த்து பார்த்து செய்திருக்கிறாராம்.

Also Read: அரசியல் ஆதாயத்திற்காக மௌன சாமியாரான கமல்.. சாதி சர்ச்சையால் கொந்தளித்த விஜய் பட இயக்குனர்

அதுமட்டுமல்ல ஜெயிலர் படத்தில் ஏழு சண்டைக்காட்சிகள் இடம்பெற்று இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் இருக்கும் சண்டை காட்சி மிகவும் சவால் நிறைந்ததாகவும் இருந்துள்ளது. இருப்பினும் மிகச் சிறப்பாக இந்த காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டிருப்பதால், நிச்சயம் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும் என்றும் ஸ்டண்ட் சிவா பெருமிதம் கொண்டார்.

மேலும் இந்த படத்தில் ஸ்டண்ட் சிவாவின் மகன் கெவினும் இணைந்து பணியாற்றி இருக்கிறார். ஆக மொத்தத்தில் ஜெயிலர் மிகப்பெரிய ஆக்சன் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் படத்தை கொண்டாடி தீர்க்க சூப்பர் ஸ்டார் ரசிகராக ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Also Read: இயக்குனர் சந்தானபாரதி வெற்றி கண்ட 5 படங்கள்.. கண்ணீர் சிந்த வைத்த கமல் படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்