இயக்குனர் சந்தானபாரதி வெற்றி கண்ட 5 படங்கள்.. கண்ணீர் சிந்த வைத்த கமல் படம்

Director Santhana Bharathi: உலகநாயகனின் நெருங்கிய நண்பர் மற்றும் தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனராய் வலம் வந்தவர் தான் சந்தான பாரதி. இவர் மேற்கொண்ட எண்ணற்ற படங்கள் மூலம் பல விருதுகளையும், புகழையும் பெற்றவர்.

மேலும் தன் நண்பனின் படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் விக்ரம் படத்தில் ஏஜென்ட் உப்பிலியப்பனாய் நடித்திருக்கிறார். அவ்வாறு இருக்க, இவர் இயக்கி வெற்றி கண்ட 5 படங்களை பற்றி இங்கு காணலாம்.

Also Read: சென்சார் போர்ட் எதிர்ப்பையும் மீறி வெற்றி கண்ட சிவாஜிகணேசன்.. ஒரே படத்தில் மாபெரும் புகழ் பெற்ற 2 ஜாம்பவான்கள்

பன்னீர் புஷ்பங்கள்: 1981ல் சந்தான பாரதி மற்றும் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த படம் தான் பன்னீர் புஷ்பங்கள். இப்படத்தில் பிரதாப், வெண்ணிற ஆடை மூர்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காதலை தழுவிய கதை கொண்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.

நீதியின் நிழல்: 1985ல் பாரதி- வாசு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் சிவாஜி கணேசன், ராதா, பிரபு, நம்பியார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டவரை தண்டிக்கும் பொருட்டும், மேலும் நியாயத்தை உணர்த்தும் வகையில் இக்கதை கொண்டு செல்லப்பட்டிருக்கும். இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Also Read: காதலுக்கு மறுத்ததால் நோயை பரப்பிவிட்ட நடிகை.. கேரியருக்கு வைத்த பெரிய ஆப்பு

சின்ன மாப்பிள்ளை: 1993ல் சந்தான பாரதி இயக்கத்தில் பிரபு, சுகன்யா, சிவரஞ்சனி ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். பணக்காரன் வேடம் போட்டு, பின் உண்மையை உணர்ந்து காதலை மேற்கொள்ளும் கதை அம்சம் கொண்ட இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்திருக்கும்.

மகாநதி: 1994ல் சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த படம் தான் மகாநதி. இப்படத்தில் சுகன்யா, கமல், சோபனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். சூழ்ச்சியில் சிக்கிக்கொள்ளும் கமலின் குடும்பம் சிதைந்து போகும் காட்சிகள் காண்போரை கண்ணீர் மல்க செய்திருக்கும். மேலும் இப்படம் வணிக ரீதியான வெற்றியையும் பெற்றுக் கொடுத்தது.

Also Read: துணிச்சலாக தூக்கி எறிந்த கரிகாலனின் தாலி.. குணசேகரனை விட சொர்ணா அக்காவாக மாறிய ஆதிரை

வியட்நாம் காலனி: 1994ல் காமெடி படம் ஆக வெளிவந்த இப்படத்தில் பிரபு, கவுண்டமணி, வினிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார்கள். இப்படத்தில் பிரபு- கவுண்டமணியின் நகைச்சுவை காட்சிகள் கூடுதல் சிறப்பை பெற்றுத் தந்திருக்கும். மேலும் இப்படத்தில் பிரபுவின் எதார்த்தமான நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்