வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

அந்த காட்சியில் நடிக்க பயந்த ரஜினிகாந்த்.. பல வருடங்களுக்கு பின் ரகசியத்தை உடைத்த இயக்குனர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதுமே தன்னை ஒரு மாஸ் ஹீரோவாக காட்டிக்கொள்ள வேண்டும் என்பதையே விரும்புவார். அவருடைய ரசிகர்களும் அவரிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிக்கு கிளாசான படங்கள் பிடிக்கும் என்றாலும் அவர் அந்த ரிஸ்கை எப்போதுமே எடுக்க மாட்டார். இதை அவருடன் பணியாற்றிய நிறைய இயக்குனர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றவுடன் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவருடைய பாட்ஷா, படையப்பா, அண்ணாமலை, அருணாச்சலம் போன்ற மாஸ் திரைப்படங்கள் தான். அவர் நடித்த முள்ளும் மலரும், கை கொடுக்கும் கை போன்ற படங்கள் அவருடைய சிறந்த நடிப்புக்கு எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டாலும் அது போன்ற படங்களுக்கு ரசிகர்களிடம் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை தான்.

Also Read:ரஜினி, விஜய் வெற்றி பெற்றால் தான் இருக்க முடியும்.. ஆனா கமல் அப்படி இல்லை, சர்ச்சையை கிளப்பிய இயக்குனர்

ரஜினிகாந்த் நடித்த மிகப்பெரிய வெற்றி படம் என்றால் அது பாட்ஷா மற்றும் படையப்பா தான் பாட்ஷா திரைப்படத்தின் வசூல் வெற்றியை அவருடைய படையப்பா திரைப்படம் தான் முறியடித்தது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மிகப்பெரிய மாஸ் திரைப்படம் என்றால் படையப்பா. இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், லட்சுமி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் போன்ற பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்திருந்தனர்.

படையப்பா திரைப்படம் பொருத்தவரைக்கும் முதல் சீனிலிருந்து கடைசி வரைக்கும் ரஜினிகாந்துக்கு பயங்கரமான மாஸ் காட்சிகள் இருக்கும். முதல் சீனில் பாம்பை கையில் பிடிப்பதிலிருந்து, ரம்யா கிருஷ்ணன் முன்னால் கால் மேல் கால் போட்டு உட்காருவது என்று ரஜினி ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவுக்கு காட்சிகள் இருக்கும். ஆனால் இந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி நடிக்க பயந்து இருக்கிறார்.

Also Read:ரஜினியின் கதையில் நடிக்கும் சிம்பு.. கமலுக்காக பல கோடி சம்பளத்தை குறைத்துக் கொண்ட சம்பவம்

சொத்துக்கள் எல்லாத்தையும் இழந்து விட்டு, அப்பா சிவாஜி கணேசனும் இறந்த பிறகு ரஜினியின் தங்கையாக நடித்த சித்தாராவுக்கு நிச்சயம் செய்திருந்த நாசர் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார். அப்போது ரஜினி தன் தங்கைக்கு ஆறுதல் சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் ரஜினி அழுவது போல் இருக்கும். மாஸ் ஹீரோவாக இருக்கும் நான் அழுதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், நன்றாக இருக்காது என்று சொல்லி ரஜினி நடிக்க மறுத்தாராம்.

ரஜினியை இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியாமல் சரி உங்கள் கண்களில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வருவது போலாவது வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி அந்த காட்சியை எடுத்தார்களாம். ஆனால் பட ரிலீசின் போது ரஜினி அழுத அந்த காட்சிக்கு ரசிகர்களிடையே பயங்கர ரெஸ்பான்ஸ் இருந்ததாக ரவிக்குமார் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

Also Read:பத்து தல படத்தில் நடிக்க இருந்த ரஜினி.. திடீர் என்ட்ரி கொடுத்த சிம்பு, காரணம் இதுதான்

- Advertisement -

Trending News