90களில் சினிமாவை வெறுத்த ரஜினி.. இரண்டாவது இன்னிங்ஸில் சூப்பர் ஸ்டார் கேரியரை தூக்கி நிறுத்திய இயக்குனர்

Actor Rajinikanth: ரஜினிகாந்த் சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 48 வருடங்களுக்கு மேல் ஆகி இருக்கிறது. அந்த வகையில் எப்படி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தாரோ அப்படியே தற்போது வரை தன்னுடைய இமேஜை தக்க வைத்துக்கொண்டு ரசிகர்களிடம் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்று நிலைத்து நிற்கும் பவர் இவரிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட இவர் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவே வேண்டாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.

அதாவது எப்படிப்பட்டவராக இருந்தாலும் அயராமல் ஓடிக்கொண்டே இருந்தால் ஒரு நேரத்தில், இது என்னடா வாழ்க்கை என்று வெறுத்து போகும் அளவிற்கு நம்மை கொண்டு போய் சேர்த்து விடும். இந்த நிலைமையில் தான் ரஜினியும் 90 இல் இருந்திருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவருக்கு ஆன்மீகப் பக்கம் இவருடைய சிந்தனையும் செயலையும் திருப்பிவிட்டார்.

Also read: சாதிய பெருமை பேசிய 7 தமிழ் படங்கள்.. நாட்டாமை படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த்

அப்பொழுது ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தியதால் படங்களில் நடித்தது வரை போதும் என்று நினைத்து சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமா என்று யோசனைக்கு போய்விட்டார். அப்பொழுது இவருக்கு தந்தை போல் நல்லது கெட்டதை பார்த்து சொல்ல கூடியவர்கள் இரண்டு பேர் இருந்திருக்கிறார்கள்.

இந்த இரண்டு பேர்கள் தான் இவரை சினிமாவிற்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். அதில் ஒருவர் கே பாலச்சந்தர் மற்றொருவர் பி. வாசு. ரஜினிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஹீரோவாக அனைவரது முன்னாடியும் நிறுத்தி வைத்தவர் இயக்குனர் பாலச்சந்தர் தான். எப்பொழுதெல்லாம் ரஜினி கொஞ்சம் டவுன் ஆகிறாரோ அப்பொழுது தந்தையாக இருந்து இவரை மேலே தூக்கி விட்டார்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

இவருக்கு அடுத்தபடியாக ரஜினியின் இரண்டாவது இன்னிங்ஸில் பி வாசு, பெரிய ஆலமரமாக இருந்து ரஜினியை வளர்த்து விட்டிருக்கிறார். சரியாக சொல்ல வேண்டுமென்றால் சினிமா வாழ்க்கை போதும் என்று முடிவெடுத்த ரஜினி, இல்லை இனிமேல் தான் நீ சாதிக்க வேண்டும் உன்னுடைய பேரும் புகழும் எல்லா பக்கமும் கொடி கட்டி பறக்க வேண்டும் என்று ஊக்குவித்திருக்கிறார்.

அப்பொழுது ரஜினிக்கு, பி வாசு கொடுத்த தரமான படம் தான் உழைப்பாளி. இப்படம் சூப்பர் ஹிட் ஆகி பெரிய அளவில் ரஜினிக்கு கை கொடுத்தது. துவண்டு போய் இருந்த சினிமா கேரியரை மீண்டும் உச்சத்துக்கு கொண்டு போய்விட்டது. அத்துடன் பி வாசு இயக்கத்தில் ரஜினி கிட்டத்தட்ட ஐந்து படங்களில் நடித்து இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணி என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

Also read: நெல்சனின் ராஜதந்திரத்தை தவிடு பொடியாக்கிய ஐஸ்வர்யா.. நிலைகுலைந்து போன ரஜினிகாந்த்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்