வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மதம் மாறி நடிக்கும் ரஜினியின் மாஸ்டர் பிளான்.. விடாத சர்ச்சையால் பவர்ஃபுல் கேரக்டர் மூலம் தரும் பதிலடி

எப்போதுமே சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ரஜினி தற்போது டபுள் மடங்கு எனர்ஜியுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார். நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வரும் சூப்பர் ஸ்டார் அடுத்ததாக ஜெய் பீம் இயக்குனருடன் கைகோர்த்துள்ளார். அதேபோன்று ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் திரைப்படத்திலும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் டிஜே ஞானவேல் இயக்கும் படத்தில் ரஜினி பவர்ஃபுல்லான கேரக்டரில் நடிக்கிறாராம். பல வருடங்களுக்கு பிறகு இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் சூப்பர் ஸ்டார் ரொம்பவே எதிர்பார்ப்புடன் இருக்கிறாராம். அந்த வகையில் அவர் இப்படத்தில் முஸ்லீமாக நடிக்க இருக்கிறார்.

Also read: இந்தியளவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 7 நடிகர்கள்.. விக்ரம் வசூலால் சூப்பர் ஸ்டாரை மிஞ்சிய கமல்!

அதன் காரணமாகவே சமீபத்தில் அவர் ஹைதராபாத் சென்ற போது பள்ளிவாசலுக்கும் சென்று வந்தாராம். இதை பார்த்த பலரும் எதற்காக அவர் முஸ்லிமாக நடிக்க வேண்டும், பள்ளிவாசலுக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்கள். அங்கு தான் விஷயமே இருக்கிறது. இந்த கேரக்டர் மூலம் ரஜினி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க திட்டமிட்டுள்ளார்.

எப்படி என்றால் ரஜினி சில திரைப்படங்களில் முஸ்லீமாக நடித்திருக்கிறார். அதில் பாட்ஷா திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. இன்றும் கூட அப்படம் ரசிகர்களின் ஃபேவரிட்டாக இருக்கிறது. அதில் அவர் மாணிக்கமாக இருந்து நண்பனுக்காக மாணிக் பாட்ஷாவாக மாறுவதுதான் படத்தின் ஹைலைட்.

Also read: தலைவருக்கு வில்லியாக நடித்ததால் ஊரை காலி செய்த நடிகை.. ரஜினி ரசிகர்கள் அலறவிட்ட சம்பவம்

அதனாலேயே நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படி ஒரு கேரக்டரை பற்றி ஞானவேல் கூறியதும் ரஜினி சந்தோஷமாக சம்மதித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் மற்றொரு வலுவான காரணமும் இருக்கிறது. அதாவது அவர் அரசியலுக்கு வரவில்லை என்று தெளிவாக கூறியிருந்த போதும் கூட அவர் மீது சில விமர்சனங்கள் எழுந்து கொண்டிருக்கிறது.

மேலும் அவர் பிஜேபிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்ற ஒரு கருத்தும் இருக்கிறது. அந்த விமர்சனங்களை எல்லாம் தகர்த்தெறியும் எண்ணத்தில் தான் ரஜினி இப்படத்தில் முஸ்லீமாக நடிக்கிறாராம். இதன் மூலம் அப்படி ஒரு பிம்பத்தை உடைக்கவும் சூப்பர் ஸ்டார் ப்ளான் போட்டு இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் பாட்ஷா போன்ற தரமான கேரக்டரில் ரஜினி நடிப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

Also read: ரஜினியால் வளர முடியாமல் போன 2 ஹீரோக்கள்.. 400 படங்களுக்கு மேல் நடித்தும் பிரயோஜனமில்ல

- Advertisement -

Trending News