பல வருடங்களாக தவம் கிடந்த சூப்பர் ஸ்டார்.. ஐஸ்வர்யாராய்க்கு தூண்டில் போட்ட ரஜினிகாந்த்

Rajinikanth: ரஜினிகாந்திற்கு ராசியான நடிகைகள் என்று சிலர் உண்டு. ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீபிரியா போன்றவர்கள் நடித்தாலே ரஜினியின் படம் ஹிட்டென அப்போதெல்லாம் ஒரு பேச்சு இருக்கும். ராசியான நடிகைகள் என்பதை தாண்டி ரஜினிக்கு ரொம்பவும் பிடித்த நடிகை என்றால் அது ஐஸ்வர்யா ராய் தான். அவருடன் நடிப்பதற்காக பல வருடங்களாக ரஜினி முயற்சி செய்து இருக்கிறார்.

படையப்பா பட வேலைகள் ஆரம்பித்த பொழுது நீலாம்பரி கேரக்டரில் ஐஸ்வர்யா தான் நடிக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் நெகட்டிவ் கேரக்டர் என்பதால் ஐஸ்வர்யா ராய் அப்போது ஒத்துக்கொள்ளவில்லை. பாபா படத்தில் நடிக்க சொல்ல முயற்சித்த போது அந்த ஹீரோயின் கேரக்டரில் குணாதிசயம் பிடிக்காததால் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம்.

ரஜினியின் சூப்பர் ஹிட் படமான சந்திரமுகி படத்தில் ஜோதிகா கேரக்டரில் முதலில் ஐஸ்வர்யா ராய் தான் நடிக்க வேண்டும் என ரஜினி ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் அது கை மாறி போய்விட்டது. தொடர்ந்து சிவாஜி படத்திலும் ஸ்ரேயா கேரக்டரில் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க ரஜினி எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார். இயக்குனர் சங்கர் கேட்டும் ஐஸ்வர்யா அதில் நடிக்கவில்லை.

Also Read:இந்த 4 படங்களில் ஐஸ்வர்யா ராய் என்கூட நடிக்க மறுத்துட்டாங்க.. கெஞ்சி கூத்தாடி கடைசியாக நடித்த ரஜினியின் எந்திரன்

தூண்டில் போட்ட ரஜினி

பல நாள் கனவு இப்படி தட்டி கழிந்து கொண்டே போவதில் ரஜினிக்கு மிகப்பெரிய ஏமாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஐஸ்வர்யா ராய் எப்படி நடிக்க ஆசைப்படுகிறாரோ அதே போன்று ஒரு கதையை எழுத வேண்டும் என்று நினைக்கட்டுமெனக்கட்டு எழுதியும் இருக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதையாக அது இருந்திருக்கிறது.

கதையைப் பற்றி இயக்குனர் லிங்குசாமியிடம் ரஜினி தெரிவித்திருக்கிறார். லிங்குசாமி, ஐஸ்வர்யா மற்றும் ரஜினிகாந்த்தை வைத்து இந்த படத்தை எடுப்பதற்கு திட்டமும் போட்டு இருக்கிறார். ஆனால் ஒரு சில காரணங்களால் இது கைவிடப்பட்டது. ரஜினி கதை எழுதும் பொழுதே ஐஸ்வர்யாவுக்கு தான் முக்கியத்துவம் இருக்க வேண்டும் என்று கதையின் தலைப்பை கூட மங்கம்மா என வைத்திருக்கிறார்.

பல வருடங்களாக முயற்சி செய்து நான்கு படங்களுக்கு கதையும் சொல்லி கடைசி வரை ஐஸ்வர்யா ராய் ஓகே சொல்லாமலேயே ரஜினியை ரிஜெக்ட் செய்திருக்கிறார். பின்னர் எந்திரன் படத்தின் மூலம் இயக்குனர் சங்கர் ரஜினியின் பல வருட ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார்.

Also Read:4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி