விஜய், அஜித்தால் குஷியில் ஓடிடி.. தியேட்டர்களை காப்பாற்ற ஓவர் டைம் பார்க்கும் ரஜினி, கமல்

Rajini-Kamal-Vijay-Ajith: பாக்ஸ் ஆபிஸ் கடவுளாக இருக்கும் டாப் ஹீரோக்களால் தான் தியேட்டர் உரிமையாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனென்றால் தற்போது ஓடிடி தளங்களின் ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. இதனால் மக்களை தியேட்டருக்கு வர வைப்பது சவாலான விஷயமாகவே இருக்கிறது.

முன்பெல்லாம் தியேட்டர்களுக்கு படையெடுத்து வந்த ரசிகர்கள் இப்போது ஓடிடியில் வரட்டும் பொறுமையாக பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்திற்கு வந்துவிட்டனர். அதில் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்களின் படங்களுக்கு மட்டும் தான் தியேட்டர்களில் கூட்டம் கூடுகிறது.

இவர்களுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர்களின் படங்களுக்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் கிடைப்பதில்லை. அதை கேப்டன் மில்லர், அயலான் ரிலீசின் போதே கண்கூடாக பார்க்க நேர்ந்தது. இதுதான் இன்றைய தியேட்டர்களின் அவல நிலை.

Also read: திகிலை காட்டிய ரஜினியின் 3 படங்கள்.. தலைவர் நடித்ததை பட்டி டிங்கரிங் செய்து ஸ்கோர் செய்த சுந்தர் சி

இந்நிலையில் விஜய் சினிமாவை விட்டு விலகுவதாக அறிவித்தது தியேட்டர் உரிமையாளர்களின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. ஏனென்றால் விஜய்யின் படங்களுக்கு எப்போதுமே மார்க்கெட்டில் நல்ல வியாபாரம் இருக்கும். அப்படி இருக்கும் போது இவர் சினிமாவில் இருந்து விலகினால் பல பேரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

அதேபோல் அஜித் பெரிய அளவில் நடிப்பில் கவனம் செலுத்துவது கிடையாது. ஏனோதானோ என்று அவர் நடிப்பதாக வெளிப்படையாகவே கருத்துக்கள் கிளம்புகிறது. இப்படி இவர்களின் போக்கு ஓடிடி நிறுவனங்களை குஷி அடைய வைத்துள்ளது.

ஏனென்றால் தற்போது தியேட்டரில் ஓடாது என தெரிந்தே பல படங்கள் நேரடியாக ஓடிடி-க்கு வந்து விடுகிறது. அதுவும் இல்லை என்றால் தியேட்டருக்கு வந்த ஒரு வாரத்தில் கூட டிஜிட்டலில் ரிலீஸ் ஆன படங்களும் இருக்கிறது. இதில் விஜய், அஜித் போட்டிக்கு இல்லை என்றால் தியேட்டர்களின் பாடு திண்டாட்டம் தான்.

Also read: கமல் சினிமாவில் விட்டுக்கொடுக்காத 5 நடிகர்கள்.. உலகநாயகனையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த நாசர்

இதனாலேயே தற்போது ரஜினி, கமல் இருவரும் ஓவர் டைம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர். தற்போது இவர்கள்தான் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகின்றனர். இவர்களால் மட்டுமே பாக்ஸ் ஆபிஸை தூக்கி நிறுத்த முடியும் என்ற சூழலும் இருக்கிறது. ஆக மொத்தம் மக்களை தியேட்டருக்கு வர வைக்கும் முயற்சியில் கோலிவுட் தீவிரமாக இறங்கினால் தான் இந்த சூழலை சமாளிக்க முடியும்.

Next Story

- Advertisement -