கமல் சினிமாவில் விட்டுக்கொடுக்காத 5 நடிகர்கள்.. உலகநாயகனையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த நாசர்

Kamal Haasan: நடிகர் கமலஹாசன் எப்போதுமே தான் நடிக்கும் படங்களில் நிறைய வித்தியாசங்கள் வேண்டும் என நினைக்க கூடியவர். அதேபோன்று தன்னுடன் நடிக்கும் நடிகர்களுடனும் தொடர்ந்து நடிக்க விரும்ப மாட்டார். ஆனால் குறிப்பிட்ட இந்த ஐந்து நடிகர்களுக்கு மட்டும் தொடர்ந்து கமல் தன்னுடைய படங்களில் வாய்ப்புகள் கொடுத்திருக்கிறார். இதற்கு முக்கிய காரணம் அவர்களுடன் இருக்கும் நட்பு மட்டுமல்லாது, அவர்களுடைய திறமையும்தான்.

கமல் சினிமாவில் விட்டுக்கொடுக்காத 5 நடிகர்கள்

சந்தானபாரதி: சந்தான பாரதி இயக்கத்தில் கமல் நடித்த படம் தான் குணா. இதைத் தொடர்ந்து ஒரு நடிகராக சந்தான பாரதிக்கு கமல் அன்பே சிவம், தசாவதாரம், விக்ரம் என தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளை கொடுத்து இருக்கிறார். சந்தான பாரதி மட்டுமில்லாமல் சமீபத்தில் மறைந்த அவருடைய அண்ணன் ஆர் எஸ் சிவாஜி தொடர்ந்து நிறைய படங்களில் கமலுடன் நடித்திருக்கிறார்.

ரமேஷ் அரவிந்த்: கமல் தயாரித்த சதிலீலாவதி படத்தில் ரமேஷ் அரவிந்த் ஹீரோவாக நடித்திருப்பார். அதிலிருந்து கமல் மற்றும் ரமேஷ் அரவிந்துக்கு நல்ல ஒரு நட்பு உருவாகிவிட்டது. அதை தொடர்ந்து மன்மதன் அன்பு படத்தில் ரமேஷ் அரவிந்துக்கு கமல் ஒரு கேரக்டர் கொடுத்து இருப்பார். மேலும் கமலின் சினிமா கேரியரில் சிறந்த படமாக அமைந்த உத்தம வில்லன் படத்தின் இயக்குனர் ரமேஷ் அரவிந்த் தான். இந்த படம் ரிலீஸ் ஆன சமயத்தில் பொருளாதார ரீதியாக வெற்றி பெற விட்டாலும் இன்று மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது.

Also Read:கைகலப்பில் முடிந்த கமல் படத்தின் டப்பிங்.. ஏஜென்ட் உப்பிலியப்பனின் கோபத்தை தனித்த ஆண்டவர்

பசுபதி: நடிகர் பசுபதி கூத்துப்பட்டறையில் இருந்து பயிற்சி பெற்று வந்த சிறந்த நடிகன். இவருடைய வித்தியாசமான நடிப்புத்திறனே இவர் ஒரு மகா கலைஞன் என்பதை உறுதிப்படுத்தும். இன்று வரை பசுபதி என்றதும் அவர் விருமாண்டி படத்தில் நடித்த கொத்தால தேவன் கேரக்டர் தான் எல்லோருக்குமே ஞாபகம் வரும். அது மட்டுமில்லாமல் இவர் கமலுடன் இணைந்து ஆளவந்தான் மற்றும் மும்பை எக்ஸ்பிரஸ் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

நெப்போலியன்: கமல் இயக்கி நடித்த விருமாண்டி படத்தில் நல்லமண நாயக்கர் எனும் கேரக்டரில் நெப்போலியன் நடித்திருப்பார். இந்த பட சமயத்திலேயே இவர்களுக்குள் நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து கமல் தசாவதாரம் படத்தை இயக்கிய போது அதில் ஒரு காட்சியில் மட்டும் வந்து விட்டுப் போகும் சோழ அரசனின் கேரக்டரில் நெப்போலியன் தான் நடிக்க வேண்டும் என கமல் விருப்பப்பட்டதால் நெப்போலியன் அமெரிக்காவிலிருந்து வந்து நடித்துக் கொடுத்து விட்டுப் போனார்.

நாசர்: நடிகர் கமலஹாசனுக்கு மனதிற்கு மிகவும் நெருக்கமானவர்களில் எப்போதுமே நாசருக்கு இடம் உண்டு. நாயகன் படத்தில் கமலின் மருமகனாக, முக்கியமான போலீஸ் கேரக்டரில் நடித்திருப்பார். அபூர்வ சகோதரர்கள், அவ்வை சண்முகி, விருமாண்டி, தேவர் மகன், உத்தம வில்லன் போன்ற பல படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

Also Read:புதிதாக உருவாகும் 5 வரலாற்றுப் படங்கள்.. 33 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கமல் – மணிரத்தினம்