வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கதிரிடம் ஓவராக ஆட்டம் ஆடிய பாண்டியனை கிழித்து தொங்கவிடும் ராஜி.. தங்கமயிலுக்கு கொடுக்கும் பதிலடி

Pandian Stores 2 serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியனுக்கு வங்கி கணக்கிலிருந்து பத்தாயிரம் ரூபாய் யாரோ எடுத்திருக்கிறார் என்று தெரிந்து விடுகிறது. உடனே செந்திலைக் கூட்டிட்டு வங்கிக்கு போய் விசாரிக்கலாம் என போகிறார். ஆனால் போகும்பொழுது எப்படியாவது அப்பாவை தடுக்க வேண்டும் என்று செந்திலும் பல வழிகளில் முயற்சி எடுக்கிறார். ஆனால் பாண்டியன், செந்தில் பேச்சை கேட்காமல் வங்கியில் போய் விசாரிக்கிறார்.

அங்கே போனதும் தெரிந்து விடுகிறது கதிர்தான் அக்கவுண்டில் இருந்து பணத்தை எடுத்து இருக்கிறார் என்று. உடனே செந்திலை கூட்டிட்டு கோபத்துடன் வீட்டிற்கு வருகிறார். வந்ததும் கதிரை பிடித்து அடித்து அவமானப்படுத்தி பேசி, திருடன் நீ எதுக்கு இங்கே இருக்கிறாய். உன்னால் பணத்தை சம்பாதிக்க முடியாது என்றால் நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திருடுவியா? 100 200 பணத்தை எடுத்துட்டு இருந்தாய் இப்பொழுது பத்தாயிரம் எடுக்க ஆரம்பிச்சிட்டியா என்று அசிங்கப்படுத்தி பேசுகிறார்.

ஓவராக ஆடிய பாண்டியனுக்கு பதிலடி கொடுக்கும் ராஜி

அத்துடன் கதிரை கோபம் வரும் பொழுதெல்லாம் அடித்து குடும்பத்தில் இருப்பவர்கள் முன் அவமானப்படுத்தி பேசுகிறார். இதையெல்லாம் பார்த்த சரவணன் உண்மையை சொல்ல வரும் பொழுது செந்தில் மற்றும் கதிர் தடுத்து விடுகிறார்கள். இதனால் பாண்டியன் ரொம்பவே கோபப்பட்டு கதிரை ஒழுங்கு மரியாதையா நாளைக்குள்ள எனக்கு என்னுடைய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவிடுகிறார்.

அப்பொழுது அங்கிருந்த கோமதி என் மகன் திருடியிருக்க மாட்டான் என்று சொல்லுகிறார். அப்பொழுது கதிர் நான் தான் பணத்தை எடுத்தேன் என்று சொல்லி அனைவருக்கும் அதிர்ச்சியை உண்டாக்குகிறார். இந்த நேரத்தில் எதுவும் சொல்ல முடியாத ராஜி வாய் அடைத்து போய் நிற்கிறார். அப்பொழுது பாண்டியன், ராஜியை பார்த்து இவன் திருடியிருக்க மாட்டான் என்று இவனுக்காக என்னிடம் வக்காலத்து வாங்கி பேசினாய்.

இப்பொழுது அவன் தான் திருடி இருக்கிறான் என்று தெரிந்து விட்டது. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று ராஜியை பார்த்து பாண்டியன் கேள்வி கேட்கிறார். ஆனால் ராஜியும் இதுக்கு பதில் சொல்ல முடியாமல் மௌனமாக நிற்கிறார். பிறகு கதிர் அவருக்கு தெரிந்த நண்பர்களிடம் பணத்தைக் கேட்டு அப்பாவிடம் கொடுக்க முயற்சி எடுக்கிறார்.

ஆனால் எங்கேயும் கடன் கிடைக்கவில்லை. மறுநாள் வீட்டுக்கு வந்த பாண்டியன், கதிரிடம் பணத்தை கேட்கிறார். கதிர் இப்பொழுது என்னிடம் பணம் இல்லை என்று சொல்லிய நிலையில் அடித்து வெளியே அனுப்புகிறார். அப்பொழுது சரவணன் எல்லா உண்மையும் சொல்லிய நிலையில் பாண்டியன் அதிர்ச்சியாக நிற்கிறார். தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பி தலை மேல் தூக்கி வைத்து ஆடிய பாண்டியனுக்கு இது தேவைதான்.

தற்போது இந்த உண்மை தெரிந்த பிறகு பாண்டியன் எதுவும் சொல்லாமல் அப்படியே மௌனமாக நிற்கும் நேரத்தில் ராஜி அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக கதிர்காக வக்காலத்து வாங்கி பேசுகிறார். கதிர் தான் பணத்தை எடுத்தார் என்று தெரிந்ததும் நீங்கள் எந்த அளவுக்கு கோபமாக அடித்து அவனை வீட்டை விட்டு வெளியே போக சொன்னீர்கள். ஆனால் இப்பொழுது எல்லாத்துக்கும் காரணம் தங்கமயில் அக்கா தான் என்று தெரிந்து விட்டது.

ஆனால் இப்பொழுது உங்களால் எதுவும் பேச முடியவில்லை என்று பாண்டியனை நல்ல நாலு கேள்வி கேட்டு கிழித்து தொங்க விடுகிறார். அத்துடன் தங்கமயிலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நான் டியூஷன் எடுத்தது, வீட்டில் நடக்கும் மற்றவர்களின் விஷயத்தில் மூக்கை நுழைத்து மாமாவிடம் எதையும் மறைக்க மாட்டேன் என்று சொன்ன உங்களுக்கு இந்த விஷயத்தை மட்டும் ஏன் சொல்ல தோணவில்லை என்று தங்கமயில் இடம் ராஜி கேள்வி கேட்கிறார்.

ஆனால் தங்கமயிலால் எதுவும் பதில் சொல்ல முடியாமல் அழுது நீலி கண்ணீர் வடித்து குடும்பத்தின் முன் சீன் போடுகிறார். உடனே பாண்டியனும் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாக போய்விடுகிறார். கதிர்காக குடும்பத்தில் இருப்பவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் மனைவி மட்டும் தான் கணவருக்கு ஒரு அவமானம் என்றால் வாயை திறந்து கேள்வி கேட்கவும் தயங்க மாட்டார். கணவருக்கு சப்போர்ட்டாக நிற்கவும் முதலாளாக வந்து விடுவார். இதற்கு உதாரணமாக ராஜியை சொல்லலாம். இதன் பிறகு ராஜி மற்றும் கதிருக்கு இடையே உண்மையான காதல் மலர போகிறது.

- Advertisement -

Trending News